Connect with us

அந்த சமயத்தில் கூட விடல.. உறுப்பில் கை வச்சு.. இளம் நடிகைக்கு நடந்த கொடுமை..!

Tamil Cinema News

அந்த சமயத்தில் கூட விடல.. உறுப்பில் கை வச்சு.. இளம் நடிகைக்கு நடந்த கொடுமை..!

Social Media Bar

சினிமாவில் எப்போதும் இருந்து வரும் பெரிய பிரச்சனையாக இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. எல்லா காலங்களிலும் கதாநாயகிகளை சினிமா துறையை சேர்ந்தவர்களும் சரி பொது மக்களும் சரி தவறான பார்வையில்தான் பார்த்து வருகின்றனர்.

ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு நிறைய நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை வெளியில் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலமாக சினிமா எவ்வளவு மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்பது மக்களுக்கு தெரிய துவங்கியுள்ளது.

அந்த வகையில் நடிகை காயத்ரி தற்சமயம் சினிமாவில் அவர் சந்தித்த பிரச்சனைகளை வெளிப்படையாக கூறியுள்ளார். ஒரு படப்பிடிப்பு தளத்தில் பிரபல இயக்குனரால் தனக்கு நடந்த கொடுமையை அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைக்கிறது என்றால் அது நடிகைகளுக்கு மிகப்பெரிய விஷயமாகும். இப்படியாக நடிகை காயத்ரிக்கு ஒரு பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த இயக்குனர் அதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் காயத்ரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனே இயக்குனர் அப்படி என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள் எல்லாம் கெட்டவர்கள் என்கிறாயா? என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த காயத்ரி நான் அப்படி கூறவில்லை. ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என கூறியுள்ளார்.

இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த இயக்குனர் நடிகையின் தோளில் கை வைத்துள்ளார். உடனே அவரது கையை தட்டிவிட்ட நடிகை என்ன சார் பண்றீங்க. இப்ப நினைச்சா நான் உங்க மானத்தை வாங்கிவிடுவேன். அந்த அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை பேட்டியில் பகிர்ந்த காயத்ரி அந்த இயக்குனர் யார் என்று கூறவில்லை. ஆனால் மிக வெளிப்படையாக சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்டை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

To Top