News
பழைய காலம் போல இந்த கால குழந்தைகள் பூமராக இல்லை!.. 2கே கிட்ஸை பாராட்டிய நடிகை ஜோதிகா!.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த முக்கிய நடிகைகளில் நடிகை ஜோதிகாவும் ஒருவர். விஜய் அஜித் சூர்யா என்று அப்போது பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஜோதிகா.
பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்டார் ஜோதிகா. அதற்கு சிவகுமாரின் குடும்ப சூழ்நிலையே காரணம் என்று கூறப்படுகிறது ஏனெனில் சூர்யா ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்வதிலேயே அவருக்கு பெரிதாக விருப்பம் இருக்கவில்லை. எனவே திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்க கூடாது என்கிற விதிமுறையின் அடிப்படையிலேயே அவர்களது திருமணம் நடந்துள்ளது.
பிறகு சூர்யா தயாரிக்கும் சில படங்களில் மட்டும் நடித்து வந்தார் ஜோதிகா தற்சமயம் திரும்பவும் தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறார். அதற்காக நல்ல கதைகளும் அமையும் போது அதில் நடித்த வருகிறார் ஜோதிகா.

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது முந்தைய தலைமுறை காட்டிலும் தற்போதைய தலைமுறை மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது என்று கூறி இருக்கிறார். திரைப்படம் பார்ப்பதிலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி அவர்கள் மேம்பட்டு இருக்கின்றனர்.
எனக்கு கதை தேர்ந்தெடுப்பதிலேயே சிறப்பான கதைகளை எனது குழந்தைகளை அங்கீகரிக்கின்றனர். மேலும் அவர்களது நண்பர்களை பார்க்கும் பொழுதும் பணம் ஜாதி என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அவர்கள் பழகுவதை பார்க்க முடிகிறது.
எனவே அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் ஜோதிகா பொதுவாக 2கே கிட்ஸ் என்றாலே அவர்கள் மீது எப்போதும் அவதூறுகளை தான் பலரும் பரப்பி வருவதை பார்க்க முடியும் கலாச்சாரத்தை சீர்கெடுத்து விட்டார்கள் என்றெல்லாம் கூறுவதை பார்க்க முடிகிறது இந்த நிலையில் அவர்களை பாராட்டி ஜோதிகா பேசியிருப்பது 2கே கிட்ஸ் மத்தியில் ஜோதிகாவிற்கு வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
