விளையாட்டு வீரரிடம் இருந்து வந்த விலை மதிப்பற்ற பரிசு!.. ஆடிப்போன நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்!..

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாவார். இவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ப்ரியதர்ஷனின் மகள் ஆவார். இவர் முதன் முதலில் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவருக்கு அதிகமாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு மலையாள சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார் கல்யாணி ப்ரியதர்ஷினி.

Social Media Bar

இதற்கு நடுவே தமிழில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தமிழ்நாட்டில் எப்படி கிரிக்கெட்டுக்கு பெரு வாரியான ரசிக பட்டாளம் இருக்கிறது அதே போல கேரளாவில் ஃபுட் பாலிற்கு பெரும் ரசிக பட்டாளம் உண்டு.

இந்த நிலையில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் பெரும் ஃபுட் பால் விசிறியாவார். இந்த நிலையில் அவரை மகிழ்விக்கும் வகையில் பிரபல ஃபுட் பால் ப்ளேயரான மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட டி சர்ட் ஒன்றை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு பரிசளித்துள்ளார்.

இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த கல்யாணி ப்ரியதர்ஷன் எனது கனவு நினைவானது, எனக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு இது என பதிவிட்டுள்ளார்.