Cinema History
சந்திச்ச ரெண்டாவது நாளே அந்த நடிகை படுக்கைக்கு கூப்பிட்டாங்க!.. பிரபல நடிகருக்கு நடந்த பகீர் சம்பவம்!.
பொதுவாக நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வரவேற்பை பெற்ற பிறகு பாலிவுட்டில் சென்று நடிப்பதை பார்க்க முடியும். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே வட இந்தியாவில் பிறந்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி.
கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி பல வருடங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக லட்சுமிக்கு முக்கியமான இடம் இருக்கும்.

லட்சுமியின் கணவரான மோகன் சர்மாவும் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிகபட்சம் இவர் தந்தை கதாபாத்திரங்களில்தான் நடிப்பார். இளமை காலங்களில் இவர் கதாநாயகனாக நடித்து வந்தார். மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மோகன் சர்மாவிற்கு ஏற்பட்ட காதல்:
அப்போதைய சமயங்களில் தான் அவருக்கும் நடிகை லட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை குறித்து அவர் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். வெகு நாட்களாகவே மோகன் சர்மாவை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்தார் லட்சுமி.
இந்த நிலையில் ஒருமுறை அவரை நேரில் சந்தித்து ஒரு நாய் பொம்மையை அவரிடம் கொடுத்து இந்த நாயை போல உங்களுடன் உங்களுடன் காலம் முழுக்க இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் லட்சுமி. இதனால் அன்று இரவு மோகன் சர்மாவிற்கு தூக்கமே இல்லாமல் போய் உள்ளது.

அதனை தொடர்ந்து மறுநாள் லட்சுமிக்கு போன் செய்த மோகன் சர்மா உங்களை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அன்று அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது லட்சுமி மிக நேரடியாக உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த ஹோட்டலில் இருந்த ஒரு அறைக்கும் அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்த மோகன் சர்மா நான் கொஞ்சம் பாரம்பரியம் பார்க்கக்கூடிய ஆள். திருமணத்திற்கு முன்பு இந்த மாதிரியான விஷயங்கள் மீது எனக்கு விருப்பமில்லை என்று கூறி ஒரு பொட்டை மட்டும் எடுத்து லட்சுமியின் தலையில் வைத்துவிட்டு சென்று இருக்கிறார் மோகன் சர்மா. இப்படித்தான் இவர்களின் காதல் துவங்கி இருக்கிறது இதனை அவர் தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.
