Tamil Cinema News
அந்த மாதிரி காட்சி கேட்டேன்.. வாயை விட்டு கனவை சிதைத்துக்கொண்ட நடிகை மந்த்ரா..!
நடிகர் ரஜினிகாந்த் எல்லா காலகட்டத்திலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்திருக்கிறார். அதனால் எல்லா காலகட்டத்திலும் புதிதாக வருகிற நடிகைகளுக்கு முக்கியமாக ரஜினியோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன நடிகைகள் பலர் இருக்கின்றனர்.
அந்த அளவிற்கு ரஜினிக்கு மார்க்கெட் உள்ளது. நடிகைகள் பலரும் ஆசைப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தார். மேலும் படம் ஓடுகிறதோ இல்லையோ ரஜினியுடன் நடித்ததே பெருமை என்று நடிகைகள் கருதினர். இப்படி எல்லாம் இருக்கும் பொழுது ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட நடிக்காத ஒரு நடிகையாக இருந்திருக்கிறார் நடிகை மந்த்ரா.
நடிகை மந்த்ரா 80களில் ரம்பாவை போலவே மிகவும் பிரபலமாக இருந்த நடிகையாக இருந்தார். இதனால் அவருக்கு பெரிய நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
சினிமாவிற்கு வந்த காலம் முதலே மந்த்ராவிற்கு ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இருந்தாலும் அவருக்கு வெகு நாட்களாகவே வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
வாய்ப்பை இழந்த நடிகை:
இந்த நிலையில் பாபா திரைப்படம் படமாக்கப்பட்ட பொழுது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது கதாநாயகி கதாபாத்திரமில்லை என்றாலும் கூட ரஜினியின் மீது காதல் வயப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்று கூறப்பட்டது.
சரி அதில் நான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன் ஆனால் எனக்கும் ரஜினிக்கும் ஒரு பாடல் அந்த படத்தில் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இரண்டாவது கதாநாயகி என்றாவது நான் சொல்லிக் கொள்ள முடியும் என்று கேட்டுள்ளார் மந்த்ரா.
ஆனால் இயக்குனர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அவர் பாபா படத்தில் பட வாய்ப்பை இழந்துள்ளார். பிறகு நடிகை சங்கவி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த விஷயத்தை மந்த்ராவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
