குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நடிகை பவித்ரா. வெகு காலங்களாகவே மாடலிங் துறையில் தொடர்ந்து முயற்சித்து வந்தார் பவித்ரா. இந்த நிலையில் அவருக்கு பெரிதாக வரவேற்புகள் என்பதே கிடைக்காமல் இருந்தது.
அதன் பிறகுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் பவித்ரா. அந்த நிகழ்ச்சியில் புகழும் பவித்ராவும் காதலிப்பதாக பேச்சுக்கள் சென்றன. ஆனால் அவர்கள் அனைத்தையும் அந்த நிகழ்ச்சிக்காகதான் செய்தார்கள். இந்த நிலையில் குக் வித் கோமாளி மூலம் பவித்ரா அதிக பிரபலமடைந்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வர துவங்கியது. இந்த நிலையில் நாய் சேகர் என்கிற திரைப்படத்தில் நடிகர் சதீஸ்க்கு இவர் ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு வெகு காலங்களாகவே பவித்ராவை காணவில்லை.
சமீபத்தில்தான் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக வந்திருந்தார் பவித்ரா. அவரது உடல் எடை அப்போது கணிசமாக குறைந்து இருந்தது. இதனால் நிறைய வதந்திகள் இதுக்குறித்து வர துவங்கின.
இந்நிலையில் நடிகை பவித்ராவே இதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது எனது உடல் பிரச்சனை குறித்து நிறைய வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் சிலவற்றை கேட்கவே முடியவில்லை. அவ்வளவு மோசமாக பேசுகிறார்கள். எனக்கு உடல் பிரச்சனை உள்ளது சீக்கிரத்தில் சரி ஆகிவிடுவேன். அதுவரை தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார் பவித்ரா.







