News
வடிவேலு கூட நடிக்கணும்னா இந்த விஷயத்தை சமாளிக்கணும்.. இல்லனா வாய்ப்பு போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.
Vadivelu: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்று கூறினால் நம் அனைவரின் நினைவுக்கு வருபவர் வடிவேலு. ஏனென்றால் இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் மீம்ஸ்களில் இவரின் படத்தை பயன்படுத்தாமல் எந்த ஒரு மீன்ஸ்களும் வராது.
அந்த வகையில் சினிமாவை விட்டு விலகி இருந்த காலத்திலும் கூட ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார் வடிவேலு.
இவரைப் பற்றி உடன் நடிக்கும் சக நடிகர்கள் பேட்டியில் சில சர்ச்சையான தகவல்களை கூறி வருவதுண்டு. அந்த வகையில் இவருடன் நடித்த சக நடிகை ஒருவர் வடிவேலுவை பற்றி கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைகைப்புயல் வடிவேலு
சினிமாவில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து சென்னை வந்து பல படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் வடிவேலு. அவர் அறிமுகமாகிய காலத்தில் கவுண்டமணி செந்தில் காம்போ மக்களிடையே பெருமளவில் பேசப்பட்டு இருந்தது.

இவர்களுக்கு மாற்றாக எந்த ஒரு காமெடி நடிகரும் வர முடியாது என்ற மனநிலையில் இருந்த பொழுது திடீரென்று வடிவேலின் காமெடி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. கவுண்டமணி செந்தில் இருவரும் நடித்த படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பு கிடைத்த போதும் அவருடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார்.
இதனால் வடிவேலுவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. வடிவேலுவை மக்கள் ரசிக்கத் தொடங்கியதால் அவரின் சம்பளமும் சினிமாவில் மற்ற நகைச்சுவை நடிகர்களை காட்டிலும் அதிகமாக தான் இருந்தது.
வடிவேலுவை பற்றி சக நடிகை கூறியது
இந்நிலையில் அவர் சில காரணங்களுக்காக சினிமாவில் நடிக்க முடியாமல் போனார். அவரைப் பற்றி அவருடன் நடித்த மற்ற காமெடி நடிகர்கள் வடிவேலுவை பற்றி பல சர்ச்சையான தகவல்களை கூறி வருவார்கள்.
வடிவேல் உடன் நடிக்கும் சக நடிகர்கள் அவரை விட அதிகமாக நகைச்சுவை செய்தால் வடிவேலு தன்னுடன் அந்த நடிகரை வைத்துக் கொள்ள மாட்டார் என பலரும் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் வடிவேலுக்கு ஜோடியாக நகைச்சுவை நடிகை பிரியங்கா நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் வடிவேலை பற்றி சில தகவல்களை கூறினார். அவர், நான் அவருடன் நடிக்கும் போது, அவர் செய்யும் காமெடிகளை பார்த்தால் நமக்கு சிரிப்பு வந்துவிடும்.

நான் பலமுறை சிரிப்பை அடக்கிக் கொண்டு அவருடன் நடித்திருக்கிறேன். மேலும் படப்பிடிப்புகளில் வடிவேலுவின் காமெடிக்கு சிரித்தால் பலருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவார்கள். எனவே வடிவேலு உடன் நடிக்க வேண்டும் என்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டுதான் நடிக்க முடியும் என பிரியங்கா கூறியிருக்கிறார்.
