Tamil Cinema News
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான தம்பி.. காதலர் யார் என்று வெளிப்படுத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா.!
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு சினிமாக்களிலும் மிகப் பிரபலம் அடைந்த ஒரு நடிகையாக இருக்கிறார். தற்சமயம் பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்து வருகின்றன.
அதற்கு முக்கிய காரணம் பாலிவுட்டில் இவர் நடித்த அனிமல் என்கிற திரைப்படம். ஆனால் புஷ்பா திரைப்படம்தான் இவருக்கு முக்கிய படமாக இருந்தது. புஷ்பா திரைப்படம் மூலம்தான் இவர் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
அதற்கு பிறகுதான் ஹிந்தி சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க துவங்கின. தற்சமயம் புஷ்பா 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.
ராஷ்மிகா மந்தனா சொன்ன விஷயம்:
முக்கியமாக முழுக்க முழுக்க அந்த விழாவில் தமிழில் பேசி இருந்தார் ராஷ்மிகா. இதன் மூலமாக தொடர்ந்து தமிழிலும் நிறைய படங்களில் இவர் நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பெரும்பாலும் ராஷ்மிகா எந்த மொழி சினிமாவிற்கு சென்றாலும் அந்த மொழியை கற்றுக்கொண்டு அங்கு பேட்டிகளில் பேசும்பொழுது அந்த மொழியிலேயே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ராஷ்மிகாவிடம் உங்களுக்கு வரப்போகும் கணவர் சினிமா துறையை சேர்ந்தவராக இருப்பாரா? அல்லது சினிமா துறைக்கு வெளியில் இருந்து வருபவராக இருப்பாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா அதுதான் ஏற்கனவே எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தானே தம்பி என்று நேரடியாகவே கூறியிருந்தார்.
ஏனெனில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது ராஷ்மிகாவின் அந்த பேச்சு.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்