Tamil Cinema News
சும்மா விளையாட்டா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டாரு.. எஸ்.கேகிட்ட அதை எதிர்பார்க்கல.. ஓப்பன் டாக் கொடுத்த சங்கீதா..!
நிறைய காமெடி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை தான் கொடுத்து வருகின்றன.
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன் இப்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். அதுவும் சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.
அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக வர துவங்கியிருக்கின்றன இன்னும் ஐந்து வருடங்களுக்குள்ளாகவே சிவகார்த்திகேயன் விஜய் அஜித் இடத்தை பிடிப்பார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
சிவகார்த்திகேயன் திறமை:
இந்த நிலையில் அவர் எவ்வளவு கடினமான உழைப்பாளி என்பது குறித்து நடிகை சங்கீதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக நாங்கள் இருந்தபோது ஒருமுறை சிவகார்த்திகேயனை அதில் நடனம் ஆட சொன்னோம்.
சிவகார்த்திகேயனும் நடனமாடினார். ஆனால் சிறப்பாக நடனம் ஆட வில்லை இதனை அடுத்து நாங்கள் அதை குறை கூறினோம். இதனால் அப்பொழுது கோபம் அடைந்த சிவகார்த்திகேயன் நான் ஒரு காமெடியன் என்னால் இவ்வளவுதான் மேடம் ஆட முடியும் என்று கூறி கூறினார்.
உடனே நான் உங்களுக்கு நடனம் ஆடுவதற்கான தகுதி இருக்கிறது அந்த நளினம் இருக்கிறது. எனவே நீங்கள் முயற்சி செய்தால் உங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று கூறினேன். அதை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு நடன பயிற்சி பள்ளியில் சேர்ந்து கடினமாக பயிற்சி கற்றுக் கொண்டு மேடையில் வந்து ஆடினார் என்று சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருக்கிறார் சங்கீதா.
