Connect with us

கவுண்டமணியால் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..

Cinema History

கவுண்டமணியால் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..

Social Media Bar

தமிழில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்தது. இதனால் கவுண்டமணி செந்தில் இருவருக்குமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் கவுண்டமணியிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அவர் அனைத்து நடிகர்களிடமும் சற்று திமிராக நடந்துக்கொள்பவர் என திரை துறையில் உள்ள பலரே தங்களது பேட்டிகளில் கூறியுள்ளனர். கவுண்டமணி இடையில் ஒருமுறை செந்திலிடமே சண்டையிட்டு அவரை விலக்கி வைத்திருந்தாராம்.

இதனால் செந்தில் சில காலங்கள் திரைப்படங்களில் தனியாகவே நடித்து வந்தார். அதே போல அவருக்கு கீழ் உள்ள நடிகர் நடிகைகளிடமும் கொஞ்சம் டெரராக நடந்துக்கொள்பவர் கவுண்டமணி. இதுக்குறித்து பிரபல நடிகை ஷார்மிளி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை ஷார்மிளி கவுண்டமணியுடன் மாப்பிள்ளை வந்தாச்சு போன்ற சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். சில காலங்களுக்கு பிறகு கவுண்டமணி இல்லாத திரைப்படங்களிலும் நடிக்க ஆசைப்பட்டார் ஷார்மிளி, ஆனால் இந்த விஷயம் கவுண்டமணிக்கு பிடிக்கவில்லை. இதை அறிந்த கவுண்டமணி தொடர்ந்து ஷார்மிளிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துள்ளார்.

சில கவுண்டமணி திரைப்படங்களில் இயக்குனரே ஷார்மிளியை தேர்ந்தெடுத்த போதிலும் கூட கவுண்டமணி உள்ளே புகுந்து கலைத்துள்ளார். இதனால் தனது வாழ்க்கை நாசமா போனதுக்கே கவுண்டமணிதான் முக்கிய காரணம் என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

To Top