Connect with us

அவர் கூட மட்டும் நடிக்காதீங்க!.. பல பேர் வார்னிங் கொடுத்தும் அந்த நடிகருடன் நடித்த ஸ்ரேயா..!

sherya

News

அவர் கூட மட்டும் நடிக்காதீங்க!.. பல பேர் வார்னிங் கொடுத்தும் அந்த நடிகருடன் நடித்த ஸ்ரேயா..!

Social Media Bar

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் வந்து வாய்ப்பை பெற்றவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் அவருக்கு வந்த உடனேயே நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் ஸ்ரேயாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரேயா. பொதுவாக இந்த மாதிரியான பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் சின்ன நடிகர்களின் படங்களில் நடிகைகள் நடிக்க மாட்டார்கள்.

உதாரணத்திற்கு நயன் தாராவே அவ்வளவாக சின்ன ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டார். இந்த நிலையில் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆடியிருப்பார் ஸ்ரேயா.

ஆனால் இதற்கு பின்னால் ஒரு கதை உண்டு. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்தான் தயாரித்தார். படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்தப்போதே படம் அவ்வளவு சிறப்பாக வரவில்லை என அவருக்கு தெரிந்தது.

எனவே ஸ்ரேயாவை வைத்து ஒரு பாடலை படத்தில் வைக்கலாம் என முடிவு செய்தார் தயாரிப்பாளர். இதற்காக ஸ்ரேயாவிற்கு முன்பணமும் கொடுத்துள்ளார். இந்த சமயத்தில் ஸ்ரேயா கந்தசாமி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வடிவேலு படத்தில் நடனமாடினால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என பலரும் ஸ்ரேயாவை பயமுறுத்தி உள்ளனர். அப்படியும் கூட கை நீட்டி காசு வாங்கிவிட்டேன். என்ன ஆனாலும் நடித்து கொடுப்பேன் என கூறி அந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார் ஸ்ரேயா

Articles

parle g
madampatty rangaraj
To Top