Connect with us

என்னை வளர்த்துவிட்டவங்க இவங்கதான்!.. வரிசையா சொன்ன வடிவேலு முக்கியமான ஆளை விட்டுட்டார்!..

vadivelu

Latest News

என்னை வளர்த்துவிட்டவங்க இவங்கதான்!.. வரிசையா சொன்ன வடிவேலு முக்கியமான ஆளை விட்டுட்டார்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கிராமத்தில் இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த வடிவேலுவின் திறமையை முதலில் கண்டவர் நடிகர் ராஜ்கிரண் தான். அதற்கு பிறகு பல நடிகர்கள் வடிவேலுவை வளர்த்துவிட்டனர்.

இந்த நிலையில் இதுக்குறித்து வடிவேலு ஒரு பேட்டியில் கூறும்போது எனக்கு தமிழ் சினிமாவில் முதன் முதலில் வாய்ப்பு கொடுத்து என்னை ஒரு பிள்ளை மாதிரி பார்த்துக்கொண்டவர் நடிகர் ராஜ்கிரண் தான். மதுரைக்கு அவர் வந்தப்போது அவரிடம் பல வித கதாபாத்திரங்களில் நடித்து காண்பித்தேன்.

vadivelu police
vadivelu policevadivelu police

அது அவருக்கு பிடித்து போகவே எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு பிறகு என்னை உயர்த்திவிட்டவர் நடிகர் கமல்ஹாசன். அவர் நடித்த சிங்கார வேலன், தேவர் மகன் போன்ற படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு எனக்கு வி.சேகர் அவரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை வாங்கி கொடுத்தார் என கூறுகிறார் வடிவேலு.

ஆனால் தேவர் மகன் படத்துக்கு முன்பே வடிவேலு சின்ன கவுண்டர் படத்தில் நடித்தார். அப்போது விஜயகாந்த் வடிவேலுவிற்கு நிறைய நன்மைகள் செய்தததாக பேச்சுக்கள் உண்டு. அவரது பேட்டியில் அதை பற்றி அவர் பேசவே இல்லை என கருத்து தெரிவிக்கின்றனர் மக்கள்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top