News
காதலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்!.. காதலை முறித்துகொண்ட சுருதிஹாசன்.. சிக்கிய லோகேஷ்!.
நடிகை சுருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாவார். இவர் பல வருடங்களாகவே சாந்தனு ஹசாரிகா என்னும் நபரை காதலித்து வந்தார். இது பலருக்கும் தெரிந்த விஷயமே.
அவர் பாலிவுட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக சில விஷயங்களையும் சுருதிஹாசன் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சாந்தனு ஹசாரிகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார் சுருதிஹாசன். மேலும் அவரையும் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார்.
காதலை முறித்துக்கொண்ட சுருதி:
இந்த நிலையில் பிரபல ஹிந்தி மீடியா ஒன்று இதுக்குறித்து சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டப்பொழுது அதற்கு விடையளிக்க அவர் மறுத்துவிட்டார். இது இருவருக்குமிடையே ஏற்பட்ட மணமுறிவை வெளிப்படுத்தும் சம்பவமாக இருந்தது.

இதற்கு நடுவே தமிழ் ரசிகர்கள் புது புரளியை கிளப்பி வருகின்றனர். லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் பாடல் செய்த பிறகுதான் சுருதிஹாசன் தனது காதலரை விட்டு விலகியுள்ளார். அந்த ஆல்பம் பாடலுக்கு பிறகு லோகேஷும் சுருதி ஹாசனும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்றனர்.
எனவே அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்க வேண்டும் அதுதான் இந்த திடீர் காதல் முறிவிற்கு காரணமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.
