Connect with us

மூன்று நாள் படப்பிடிப்புக்கு வராத சிம்ரன்!.. நான்காவது நாள் சம்பவம் செய்த டான்ஸ் மாஸ்டர்!..

simran dinesh master

Cinema History

மூன்று நாள் படப்பிடிப்புக்கு வராத சிம்ரன்!.. நான்காவது நாள் சம்பவம் செய்த டான்ஸ் மாஸ்டர்!..

Social Media Bar

விஜய்யின் பெரும்பாலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தினேஷ் மாஸ்டர். ஷாஜஹான் முதல் லியோ வரை பல படங்களில் அவர் நடிகர் விஜய்யுடன் பணிப்புரிந்துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டராக மாறுவதற்கு முன்பிருந்த இவருக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது.

இதனை அடுத்து அவர் டான்ஸ் மாஸ்டர் ஆனதும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜய். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டே தினேஷ் மாஸ்டர் தொடர்ந்து விஜய்யிடம் வாய்ப்பை பெற்றார். விஜய் நன்றாக டான்ஸ் ஆட கூடியவர் என்பதால் அவரை வைத்து வேலை வாங்குவது அனைத்து டான்ஸ் மாஸ்டர்களுக்கு எளிதான விஷயமாகும்.

இந்த நிலையில் யூத் திரைப்படத்திற்கும் இவர்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அதில் நான்கு நாட்களில் ஆள்தோட்ட பூபதி நானடா பாடலை படம்ப்பிடிக்க வேண்டி இருந்தது. அதில் விஜய்யுடன் சிம்ரனும் ஆட வேண்டி இருந்தது.

actress simran
actress simran

ஆனால் முதல் மூன்று நாட்கள் சிம்ரன் வரவே இல்லை. விஜய் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்துக்கொண்டிருந்தார். இதனை பார்த்துக்கொண்டிருந்த டான்ஸ் மாஸ்டர் விஜய்க்கான அனைத்து காட்சிகளையும் படம் பிடித்து விட்டார்.

ஆனால் சிம்ரனுக்கும் அதற்கு நிகரான காட்சிகள் இருந்தன. எனவே மூன்று நாட்கள் கழித்து சிம்ரன் வந்தார். அந்த ஒரு நாளிலேயே சிம்ரனை வைத்து எடுக்க வேண்டிய எல்லா காட்சிகளையும் எடுத்தார் தினேஷ் மாஸ்டர். அந்த அளவிற்கு சொன்னப்படி பாட்டை முடித்து கொடுக்க முழுதாக இறங்கி வேலை செய்துள்ளார் தினேஷ் மாஸ்டர்.

To Top