Connect with us

ரஜினியோடு அந்த மாதிரி நடிச்ச ஒரே நடிகை ஸ்ரீ வித்யாதான்.. இந்த விஷயம் தெரியலையே..!

Cinema History

ரஜினியோடு அந்த மாதிரி நடிச்ச ஒரே நடிகை ஸ்ரீ வித்யாதான்.. இந்த விஷயம் தெரியலையே..!

Social Media Bar

நடிகர் ரஜினிகாந்தோடு தமிழ் சினிமாவில் சேர்ந்து நடித்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார்.

முதன் முதலாக ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா தான் நடித்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்தோடு பலதரப்பட்ட வேஷங்களில் ஸ்ரீவித்யா நடித்திருக்கிறார்.

வேற எந்த நடிகையும் அந்த மாதிரி நடித்தது கிடையாது. ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தாலும் கூட ரஜினிகாந்தின் மார்க்கெட் அதிகரிக்க துவங்கிய பிறகு ஸ்ரீவித்யா அதே ரஜினிகாந்துக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது.

உழைப்பாளி மற்றும் மனிதன் திரைப்படங்களில் ரஜினிகாந்துக்கு அக்காவாக நடித்திருந்தார் ஸ்ரீவித்யா. ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்னும் ஒரு படி மேலே சென்று தளபதி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீவித்யா. அதே போல மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மாமியாராக நடித்திருந்தார் ஸ்ரீ வித்யா.

இப்படி ரஜினிகாந்துடன் சேர்ந்து மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்த ஒரே நடிகை ஸ்ரீவித்யா தான் என்று கூறப்படுகிறது.

To Top