Connect with us

வாலி எழுதின பாடல் வரிகள்ல பிழை இருக்கு!.. குற்றம் சொன்ன ஊர்வசியை பழி வாங்கிய வாலி!..

poet vaali uruvasi

Cinema History

வாலி எழுதின பாடல் வரிகள்ல பிழை இருக்கு!.. குற்றம் சொன்ன ஊர்வசியை பழி வாங்கிய வாலி!..

Social Media Bar

Poet vaali: தமிழ் சினிமாவில் பல காலங்களாக பாடல் வரிகளை எழுதி வந்த பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மட்டுமின்றி ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறைகளுக்கு பாடல் வரிகளை வாலி எழுதியிருக்கிறார்.

எந்த ஒரு சூழ்நிலைக்கும் தகுந்தார் போல சிறப்பாக பாடல் வரிகளை எழுதக்கூடியவர் வாலி. எம்.ஜி.ஆர் க்கு அதிகமான பாடல் வரிகளை இவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அப்போதைய கால கட்டங்களில் அந்த தலைமுறைக்கு தகுந்தார் போல பாடல் வரிகளை எழுதினார்.

poet-vaali
poet-vaali

ஆனால் அதே மாதிரி விஜய் அஜித்திற்கு பாடல் வரிகளை எழுதும் பொழுது முற்றிலுமாக மாறுபட்ட பாடல் வரிகளை எழுதி இருந்தார். அப்படிப்பட்ட கவிஞர் வாலியை நடிகை ஊர்வசி குற்றம் சொன்ன சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.

பாடலை எதிர்த்த ஊர்வசி:

மகளிர் மட்டும் என்கிற திரைப்படத்தில் ரேவதி ஊர்வசி போன்ற நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு வரிகளை கவிஞர் வாலிதான் எழுதியிருந்தார். அதில் கரவை மாடு மூன்று காளை மாடு ஒன்று என்று ஒரு பாடல் இடம் பெற்றது.

அந்த பாடல் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கருதிய ஊர்வசி அந்த பாடலை அந்த பாடலுக்கு நடிக்க மாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இந்த செய்தி வாலிக்கு சென்றது ஊர்வசி நடிக்க மறுத்ததால் பாடல் வரிகளை மாற்றும் படி வாலியிடம் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அதற்கு பதில் அளித்த வாலி அந்த பாடல் அந்த காட்சிக்கு சரியான ஒரு பாடல் தான் என்று கூறி ஊர்வசியை சமாதானப்படுத்தி இருக்கிறார். சரி என்று ஊர்வசியும் பிறகு அந்த காட்சியில் நடித்திருக்கிறார். இதற்குப் பிறகு ஊர்வசியை கிண்டல் செய்யும் விதமாக ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி என்கிற பாடல் வரிகளை எழுதினார் வாலி.

அந்த பாடலைக் கேட்ட உடனே ஊர்வசி வாலியிடம் சென்று யாரை குறி வைத்து இந்த பாடலை எழுதினீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த வாலி உன்னை குறிக்கும் விதத்தில்தான் அதை எழுதினேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்த நிகழ்வை ஊர்வசி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top