Connect with us

வில்லன் நடிகருடன் ஷங்கர் மகள் ரொமான்ஸ்.. வருத்தத்தில் ஷங்கர்..

aditi shankar 1

News

வில்லன் நடிகருடன் ஷங்கர் மகள் ரொமான்ஸ்.. வருத்தத்தில் ஷங்கர்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் பொதுவாக பெண்கள் இளம் வயதிலேயே நடிகைகளாக அறிமுகமாகி விடுவார்கள் ஆனால் பிறகு தாமதமாகதான் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர்.

ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அந்த பின்புலத்தை பயன்படுத்தி எளிமையாக கதாநாயகி ஆகிவிட்டார். அதனால் முதல் திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதிதி ஷங்கர்.

கார்த்தி படத்தில் அறிமுகம்:

அதற்குப் பிறகு அவருக்கு வரவேற்புகள் கிடைத்ததை அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மாவீரன் திரைப்படத்திலும் நடித்தார்.

ஆனால் கார்த்தியுடன் நடிக்கும் போது அவர் பார்ப்பதற்கு ஜோடியாக தெரிந்தாலும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை விட வயது அதிகமான ஒரு பெண்ணாக அவர் தெரிந்ததாக அப்பொழுது விமர்சனங்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் தொடர்ந்து அவர் படங்களில் கமிட்டாகி வருகிறார் இந்த நிலையில் மணிகண்டனை வைத்து குட் நைட், லவ்வர் போன்ற திரைப்படங்களை இயக்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது.

அர்ஜுன் தாஸ் படம்:

இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.  கைதி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கான வரவேற்பு அதிகரித்தது. அவரும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

மேலும் சில  பொது இடங்களுக்கு இவர்கள் ஒன்றாக சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்குமா என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் அதிதி ஷங்கரைப் பொறுத்தவரை அவர் பேட்டிகளிலேயே தனக்கு காதல் மீதெல்லாம் பெரிதாக இப்பொழுது ஈடுபாடு இல்லை என்று கூறியிருந்தார்.

அதனால் அவர்களிடையே நட்பு ரீதியான பழக்க வழக்கமாகத்தான் இருக்கும் என்று பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும் இதனால் இயக்குனர் ஷங்கர் கொஞ்சம் கவலையில் இருப்பதாக அரசல் புரசலாக பேச்சுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

எப்படி இருந்தாலும் ஷங்கருக்கு தனது மகள் நடிக்க வந்ததில் அவ்வளவாக விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top