News
விஜய் ரஜினி இருவரையுமே காக்க வைத்த நடிகை.. இவர்களே ஆசைப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?
சினிமாவில் நடிகைகள் ஒவ்வொரு படங்களிலும் புதுமுகமாக அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருந்தாலும், ஒரு காலத்தில் அனைவருக்கும் கனவு கன்னி ஆக விளங்கியவர் ஐஸ்வர்யா ராய். மேலும் இவரை உலக அழகி என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும்.
அழகில் மட்டும் இல்லாமல், அறிவிலும் சிறந்து விளங்கும் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர்கள் ஆசைப்பட்டும் ஆனால் கடைசியில் அது நடக்காமல் சென்றது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜய், இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் இவருக்கு ரசிகராக இருக்கும் வேலையில், நடிகர் விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தில் நடிகர் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்ததாக செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யுடன் பல நடிகைகளும் நடிக்க ஆசைப்படும் நிலையில் தற்போது கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். மேலும் இவருடன் எமி ஜாக்சன், மாளவிகா மோகன், பூஜா ஹெக்டே, போன்ற பல நடிகைகள் போட்டி போட்டு நடித்து பிரபலமானார்கள். விஜய் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு வந்த வேளையில் தமிழன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க வேண்டும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் இறுதியில் அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க முடியாமல் சென்று விட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. படத்தில் கதாநாயகியின் காட்சி சிறிது நேரம் வரும் என்பதால் ஐஸ்வர்யா ராய் வேண்டாம் என்று கூறியதாகவும், மற்றொரு காரணமாக ஸ்கிரீனில் பார்ப்பதற்கு விஜயை விட நான் பெரிய பெண்ணாக தெரிவேன் என ஐஸ்வர்யா ராய் கூறினார் என்று பல காரணங்கள் கூறப்பட்டு வந்தன.
விஜய், ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க ஆசைப்பட்டதாகவும், விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை ஐஸ்வர்யா ராய் இழந்திருக்கிறார் என அவரின் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் அந்த படத்தில் உலக அழகி பிரியங்கா சோப்ரா நடித்து தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாகி இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யார் அந்த மற்றொரு நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இந்திய சினிமாவின் பிரபல நடிகராகவும் அனைவராலும் அறியப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பல முன்னணி நடிகைகளுடன் நடித்திருக்கிறார்.

மேலும் இவருக்கு உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், இவர் நடித்த பாபா படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்காக கேட்டிருந்தார். ஆனால் இறுதியாக பாபா படத்தில் மனுஷா கொய்ராலா நடிக்க வேண்டியதாயிற்று.
ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க ஆசைப்பட்டு எந்திரன் படத்தில் தான் அது சாத்தியமானது என தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
