Connect with us

பார்ட்டியில் என்னிடம் மோசமாக நடந்துக்கொண்ட இயக்குனர்… உண்மையை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..

aishwarya rajesh

News

பார்ட்டியில் என்னிடம் மோசமாக நடந்துக்கொண்ட இயக்குனர்… உண்மையை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..

Social Media Bar

Aishwarya Rajesh: சினிமாவில் பட வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. தற்பொழுது வளர்ந்து இருக்கும் நடிகைகளை கேட்டால், அவர்கள் பயணித்து வந்த பாதையை சொல்லுவார்கள். அந்த வகையில் அவர்கள் தற்பொழுது இருக்கும் இடத்தை பிடிப்பதற்கு ஏராளமான அவமானங்களை சந்தித்து வந்தது என அனைத்தையும் கூறுவார்கள். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரணமாக குடும்பத்தில் இருந்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல.

சினிமா பின்புலத்தில் இருந்து வந்தாலும், ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களின் திறமையை வைத்து மட்டும் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வேண்டும் என நினைத்து, தற்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் தற்போது சினிமாவில் நுழைவதற்காக பட்ட கஷ்டங்கள் மற்றும் இயக்குனர்கள் நடந்து கொண்ட விதத்தை பற்றியும் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு தொகுப்பாளராக வேண்டும் என அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றார். அதன் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

இதன் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அட்டகத்தி, காக்கா முட்டை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

aishwarya rajesh

மேலும் கதாநாயகிக்கு மட்டும் முக்கியத்துவம் கொண்ட “கனா” படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவ்வாறு பல படங்களின் மூலம் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால், அவருக்கு தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

பார்ட்டியில் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர்

பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க வைப்பதற்காக கூறியதாகவும், அவரைப் பார்க்க ஐஸ்வர்யா ராஜேஷ் நேரில் சென்று இருக்கிறார். அப்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ்-யை பார்த்த இயக்குனர், இவரை ஜூனியர் ஆர்டிஸாக கூட நடிக்க வைக்க முடியாது. அவரை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என ஏளனமாக பேசியிருக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை ஒரு ஊக்கமாக எடுத்துக்கொண்டு சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, தற்போது இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் மற்றொரு பட வாய்ப்புக்காக ஒரு இயக்குனர் என்னை பார்ட்டிக்கு அழைத்ததாகவும், அதனை நம்பி நான் சென்றேன். பிறகு அவரின் படத்தின் கதையைக் கேட்ட பிறகுதான் எனக்கு விவரம் தெரிய வந்தது. அந்த படத்தில் எனக்கு ஒரு மோசமான கதாபாத்திரம் என்று அவர் கூறினார்.

ஏன் அவர் அந்த கதையை என்னிடம் கூறினார் என எனக்கு அப்பொழுது புரியவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நடந்த நிகழ்வுகளை கூறியிருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top