Tamil Cinema News
தல யின் அடுத்த பட கூட்டணி.. ஷாக் கொடுத்த அஜித் 65 அப்டேட்.!
நடிகர் அஜித் தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படங்கள் குறித்து சில அப்டேட்டுகள் வெளியாகியிருக்கின்றன. தற்சமயம் கார் ரேஸ் மீது ஆர்வமாக இருப்பதால் அஜித் தொடர்ந்து அதன் மீது கவனம் செலுத்தி வருகிறார். எனவே குறைவாகவே படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை ஆரம்பத்தில் அட்லீதான் இயக்க இருந்தார். ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய தாமதமானது. இந்த காரணத்தினால் தற்சமயம் நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து அடுத்த படத்தை துவங்கிவிட்டார் அட்லீ.
இந்த நிலையில் ஷாக்கிங் கொடுக்கும் விதமாக கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. கே.ஜி.எஃப் மாதிரியான கதைகள் எல்லாம் அஜித்திற்கு செட் ஆக கூடிய கதையாகும்.
எனவே அஜித்தும் பிரசாந்த் நீலும் ஒன்றினைந்தால் அது பெரிய காம்போவாக இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன. இதுக்குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
