Connect with us

இத்தன வருஷமா செய்யாத விஷயத்தை செய்ய சொன்ன சன் பிக்சர்ஸ்.. அடுத்த படம் கமிட் ஆவதில் அஜித்திற்கு வந்த அவதி!..

ajith

News

இத்தன வருஷமா செய்யாத விஷயத்தை செய்ய சொன்ன சன் பிக்சர்ஸ்.. அடுத்த படம் கமிட் ஆவதில் அஜித்திற்கு வந்த அவதி!..

Social Media Bar

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் வரவில்லை. அதற்கு காரணம் தற்சமயம அவர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம்தான். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பானது வெகு காலங்களாகவே நடந்து வருகிறது.

இதனால் அஜித்தின் திரைப்படங்கள் வெளிவருவதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க துவங்கிவிட்டார் அஜித். இதனால் விடாமுயற்சி வெளியாகுமா என்பதே தற்சமயம் சந்தேகமாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் துவங்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்க போகும் திரைப்படம் குறித்தும் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

ajith
ajith

இந்த படத்திற்கு பிறகு அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்க உள்ளதாம். ஆனால் அஜித் கேட்கும் சம்பளம் அதிகமாக இருப்பதால் சன் பிக்சர்ஸ் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

அதே சமயம் சன் டிவியில் இந்த படத்திற்காக அஜித் பேட்டி ஒன்றை கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனராம். ஆனால் அஜித் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்தே பல வருடங்கள் ஆனதால் பேட்டி அளிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

To Top