Connect with us

தளபதி மேல கை வச்சது தப்புதான்!.. மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!..

ajith fan

News

தளபதி மேல கை வச்சது தப்புதான்!.. மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!..

Social Media Bar

2004 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் சூப்பர் டூப் ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. ரஜினிகாந்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் எப்படி பாட்ஷா ஒரு முக்கியமான படமாக இருந்ததோ அதே போல விஜய்க்கு கில்லி முக்கியமான திரைப்படமாகும்.

கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்சமயம் மீண்டும் அந்த படத்தை மறு வெளியீடு செய்தனர். அந்த திரைப்படத்திற்கு இப்போதும் கூட அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் கில்லி திரைப்படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

ghilli
ghilli

இந்த நிலையில் நேற்று தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் திரைப்படங்களான பில்லா, தீனா போன்ற திரைப்படங்கள் மறு வெளியீடு ஆனது. அப்போது அஜித் படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் அங்கிருந்த கில்லி பட பேனரை கிழித்துவிட்டார்.

இது விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வீடியோவும் வைரலாகி வந்தது. இந்த நிலையில் அந்த அஜித் ரசிகர் தற்சமயம் தான் செய்தது தவறு என கூறி இதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காலை 11 மணிக்கு பசங்களோட காசி தியேட்டருக்கு அஜித்தின் தீனா படத்தை பார்க்க போனேன். அப்போது அங்கு கில்லி படத்தின் போஸ்டர் இருந்தது. பசங்களோட சேர்ந்து ஜாலிக்காக அந்த பேனரை கிழித்துவிட்டேன். அதுக்காக விஜய் ரசிகர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார் அந்த அஜித் ரசிகர்.

To Top