Connect with us

என்னையா குப்ப மாதிரி ஒரு அஜித் படத்தை எடுத்திருக்க-  புலம்பிய திரையரங்கு முதலாளிக்கு லிங்குசாமி செய்த சம்பவம்..!

Cinema History

என்னையா குப்ப மாதிரி ஒரு அஜித் படத்தை எடுத்திருக்க-  புலம்பிய திரையரங்கு முதலாளிக்கு லிங்குசாமி செய்த சம்பவம்..!

Social Media Bar

தமிழில் பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கிய திரைப்படங்களில் சில படங்களே தமிழில் ஹிட் கொடுத்துள்ளன. எனவே தமிழ் சினிமாவில் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை.

ஆனால் மாதவன், அஜித், விஷால் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆரம்பக்கட்டத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜி. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்தார். அப்போதே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு அந்த படம் தயாரிக்கப்பட்டது.

எனவே திரையரங்குகள் எல்லாம் அந்த படத்திற்காக வெகுவாக காத்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. படம் வெளியான முதல்நாளே திரையரங்க ஊழியர்கள் லிங்குசாமிக்கு போன் செய்து என்னையா இது இப்படி ஒரு குப்பை படத்தை எடுத்து வச்சிருக்க என திட்டிவிட்டனர்.

எனவே அப்போது லிங்குசாமி ஒரு முடிவு செய்தார். பெரும் ஹிட் கொடுக்கும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என முடிவெடுத்தார். சண்டக்கோழி திரைப்படத்தின் கதை தயாரானது. முதலில் அந்த படத்தில் விஜய்தான் கதாநாயகனாக நடிக்க இருந்தது. ஆனால் விஜய் ஒப்புக்கொள்ளாததால் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஷாலை வைத்து அந்த படம் எடுக்கப்பட்டது.

2005 டிசம்பரில் சண்டக்கோழி வெளியானது. எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகமான ஹிட் கொடுத்தது சண்டக்கோழி. கிட்டத்தட்ட 200 நாட்கள் வரை அந்த படம் ஓடியது.

To Top