News
அடுத்த படமே ஸ்டார்ட் ஆயிடுச்சு!.. வலிமை மாதிரி ஆயிடுமா விடாமுயற்சி!..
அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அஜித்தின் நடிப்பில் அடுத்த படம் என்பது இன்னமும் வரவில்லை.
இதற்கு நடுவே விஜய் நடித்த லியோ படமும் வெளியாகி வெற்றியை கொடுத்துவிட்டது. அடுத்து விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை.

ஏனெனில் ஆரம்பத்தில் அஜித் உலக சுற்று பயணம் சென்ற காரணத்தால் தாமதமாகவே விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அதன் பிறகாவது சுறு சுறுப்பாக சென்றதா என்றால் அதுதான் இல்லை. லைக்கா நிறுவனம் தொடர்ந்து பெரிய படங்களாக கமிட் செய்ததால் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதனை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகளே வெகு நாட்களாக நடத்தப்படாமல் இருக்கிறது. எனவே அஜித் அடுத்த படமான குட் பேட் அக்லியில் நடிக்க சென்றுவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு நாட்களாக ஆந்திராவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படம் வெளியாகுமா? மீண்டும் அஜித் அந்த படத்தில் வந்து நடித்து கொடுப்பாரா? என்பதெல்லாம் கேள்விக்குறியான விஷயமாக இருக்கிறது.
