Cinema History
அஜித்துக்காக எழுதின ஒரு பாட்டு!.. இலங்கை தமிழர்களை வெகுவா பாதிச்சிட்டு!..
Actor Ajith : தமிழ் திரைப்பட பாடல்களை பொறுத்தவரை நிறைய திரைப்பட பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறலாம். இன்னமும் பல அம்மன் கோவில்களில் தமிழ் சினிமாவில் வரும் அம்மன் பாடல்கள் ஒளிபரப்பப்படுவதை பார்க்க முடியும்.
அந்த அளவிற்கு மனிதர்களின் வாழ்க்கையில் சினிமா கலந்து உள்ளது என்று கூறலாம். ஒரு திருமண விசேஷத்தில் துவங்கி காது குத்து கல்யாணம் இறப்பு என அனைத்திற்கும் சினிமாவில் பாடல்கள் இருக்கின்றன.
ஆனால் புரட்சியாளர்களுக்கு ஏற்ற பாடல்களும் தமிழ் சினிமாவில் உண்டு ஆம் அஜித் நடித்து வெளியான முக்கியமான திரைப்படம் சிட்டிசன். சிட்டிசன் திரைப்படத்தில் பழைய கதை வரும்பொழுது அதில் அஜித் ஒரு புரட்சிகரமான பாடலை பாடுவது போன்ற காட்சி இருக்கும்.

மேற்கே உதித்த சூரியனை என்கிற அந்த பாடல் அப்போது பலருக்கு பிடித்த பாடலாக இருந்தது. முக்கியமாக இலங்கையில் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வெகுவாக ஈர்த்தது.
அதனை தொடர்ந்து அந்தப் பாடலை தங்களுக்கான பாடலாக்கி அதை பல இடங்களில் பயன்படுத்தியும் கொண்டனர் விடுதலை புலிகள். இயக்குனர் சரவண சுப்பையா இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு சிட்டிசன் திரைப்படம் தான் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது தேவா இதில் நான் போடும் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார் அதன்படியே அந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பாடல்களாக அமைந்தன.
