News
விடாமுயற்சியின் கதை இதுதான்… அந்த ஹாலிவுட் பட கதை மாதிரி இருக்கே!..
Actor Ajith Vidamuyarchi : துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த படம் தூங்குவதற்கு முன்பே படத்திருக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டு விட்டது.
வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. லியோ படமும் தற்சமயம் வெளியாகி அதற்கு அடுத்த படத்திற்கு விஜய் நடிக்க சென்ற பின்பும் அஜித் மட்டும் இப்பொழுதுதான் விடாமுயற்சியின் படபிடிப்பிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏனெனில் துணிவு படம் முடிந்து சில நாட்கள் அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்சமயம் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் இயக்குனர் மகிழ்திருமேனி அதிக ரத்த காட்சிகளை கொண்ட ஒரு படத்தின் கதையைதான் கூறியுள்ளார்.

ஆனால் அது அஜித்திற்கு பிடிக்கவில்லை அதனை தொடர்ந்து ஒரு குடும்ப கதையை ஒட்டிய ஆக்ஷன் கதையை கூறியுள்ளார். அதாவது அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர்.
அப்படி செல்லும் பொழுது ஒரு அடையாளம் தெரியாத குழுவிடம் சிக்கிக் கொள்கிறார் திரிஷா. அவரை விடுவிப்பதற்காக அஜித் எடுக்கும் முயற்சிகளே இந்த படத்தின் கதை ஆகும். படக்கதைப்படி வெளிநாட்டில் அஜித் இருப்பதால் யாரையும் தெரியாது என்பதாலும் தனியாக அவர் போராடுவதே கதையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஏற்கனவே ஹாலிவுட் வந்த கதை தானே தமிழில் கூட இந்த மாதிரி கதைகள் நிறைய வந்துள்ளது என்று பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் மகிழ்திருமேனி இயக்கத்தில் அந்த படத்தின் திரைக்கதை வேறு விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத
