Cinema History
கதாநாயகி கேட்ட சம்பளத்தால் அதிக தொல்லை வந்தது!.. கஷ்டப்பட்ட இயக்குனர் அமீர்!..
Tamil Director Ameer : தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அதற்கு முன்பு வரை இவர் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இருந்த பிரச்சனையின் காரணமாக தனியாக பிரிந்து வந்த அமீர் படமெடுக்க துவங்கினார்.
அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே என்னும் திரைப்படம். மௌனம் பேசியதே திரைப்படத்தை பொறுத்தவரை அதில் சூர்யாவின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட பாலா (Director Bala) திரைப்படங்களில் வரும் கதாநாயகன் கதாபாத்திரத்தோடு ஒத்து இருக்கும்.
ராம் திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரமும் அப்படிதான் இருக்கும். ஏனெனில் பாலாவின் தாக்கம் கொஞ்ச நாட்களுக்கு அமீரிடம் இருந்தது. இந்த நிலையில் மௌனம் பேசியதே (Mounam Pesiyathe Movie) திரைப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்தார். க்ளைமேக்ஸ் காட்சியில் லைலா வருவதாக ஒரு காட்சி வரும். அந்த காட்சியை சீக்ரெட்டாக வைத்திருந்தார் அமீர்.
எனவே இந்த காட்சியில் நடிப்பதற்காக அவர் லைலாவிடம் கேட்டுள்ளார். லைலாவும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்த ஒரு காட்சியில் வருவதற்கே அவர் அதிகமான சம்பளம் கேட்டார். பொதுவாக கேமியோ கதாபாத்திரத்தில் வருபவர்கள் சம்பளமே வாங்காமல்தான் நடித்து கொடுப்பார்கள்.
ஆனாலும் லைலா கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். ஆனால் இணை தயாரிப்பாளர்களுக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் லைலா மீது இருந்த கோபத்தை அமீர் மீது காட்டியுள்ளனர். இதனை அமீர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்