Connect with us

எனக்கு தீர்ப்பு கிடைச்சிட்டு… இனிமே அவங்கதான் அனுபவிப்பாங்க!.. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்த அமீர்!..

ameer gnanavelraja

Cinema History

எனக்கு தீர்ப்பு கிடைச்சிட்டு… இனிமே அவங்கதான் அனுபவிப்பாங்க!.. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்த அமீர்!..

Social Media Bar

Director Ameer: பருத்திவீரன் திரைப்படம் வெளியான காலம் முதலே அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சனை இருந்து வருகிறது. அமீர் தன்னை ஏமாற்றி அந்த படத்தை எடுத்துவிட்டார் என்பது ஞானவேல்ராஜாவின் புகாராக இருந்தது.

ஆனால் அந்த படம் தயாரிப்பதற்கான சரியான தொகையை கொடுக்காமல் ஞானவேல் ராஜா கைவிட்டார். அதனையடுத்து பல இடங்களில் கடன் வாங்கிதான் அந்த படத்தை இயக்கினேன் எனவே எனக்கு சேர வேண்டிய தொகையை ஞானவேல்ராஜா தர வேண்டும் என்பது அமீர் பக்க வாதமாக இருந்தது.

ஆனால் படம் தயாரிப்பை விடவும் அதிக லாபத்தை ஈட்டி கொடுத்தது. இருந்தாலும் ஞானவேல்ராஜா அமீருக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஞானவேல்ராஜா கூறும்போது அமீரை குறித்து மிக மோசமாக பேசியிருந்தார்.

ameer
ameer

இதனை அடுத்து இயக்குனர் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி என பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கினர். மக்களும் கூட அமீருக்கு ஆதரவாக பேசினர்.

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து தற்சமயம் பேசிய அமீர் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் வழக்கு தொடர்ந்தேன். பணம் ஒரு விஷயமே இல்லை. தற்சமயம் மக்கள் மத்தியில் எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இனி அந்த பணம் எனக்கு கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை என பதிலளித்துள்ளார் அமீர்.

To Top