Connect with us

எம்.ஜி.ஆருக்கு நிகரான ஆள் விஜய்!.. திரையரங்கம் வந்து கண் கலங்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்!..

vijay mgr

News

எம்.ஜி.ஆருக்கு நிகரான ஆள் விஜய்!.. திரையரங்கம் வந்து கண் கலங்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்!..

Social Media Bar

20 வருடங்கள் கழித்து வெளியானாலும் கூட இப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக கில்லி திரைப்படம் இருக்கிறது. இப்போது வெளியான ரத்னம், ரோமியா மாதிரியான திரைப்படங்களை எல்லாம் ஓரம் கட்டியுள்ளது கில்லி திரைப்படம்.

தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படத்திற்கு அப்போதே எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் படத்தை பார்க்க வந்த எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் ஆனந்த கண்ணீர் விட்டு மனதில் உள்ளதை கொட்டியிருப்பது தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கில்லி படத்தை பார்த்துவிட்டு அவர், எனக்கு 65 வயதாகிறது, நான் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன். பல வருடங்களுக்கு முன்பு நான் எம்.ஜி.ஆர் படத்தை பார்க்க சென்றப்போது இதே மாதிரியான கூட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்த்தது நினைவுள்ளது. ஆனால் 20 வருடங்கள் கழித்து வெளியாகும் இந்த படத்திற்கு இப்படி ஒரு கூட்டம் இருப்பது பார்ப்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது.

இதே படத்தை நான் பல தடவை பார்த்துள்ளேன். கடவுள் அவருக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அரசியலிலும் கூட எம்.ஜி.ஆருக்கு நிகரான ஒரு இடத்தை விஜய் பிடிப்பார் என்கிறார் அந்த முதியவர்.

To Top