Connect with us

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்..! மாஸ் காட்டிய அனிரூத்..!

Tamil Cinema News

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்..! மாஸ் காட்டிய அனிரூத்..!

Social Media Bar

தமிழ்நாட்டில் ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜாவை விடவுமே அதிக வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக அனிரூத் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தொடர்ந்து அனிருத்தின் மார்க்கெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் ஒரு இசையமைப்பாளராகவே அனிருத் இருந்து வருகிறார்.

அதேபோல இசையமைக்கும் படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அனிருத் வேறு வகையிலும் அதிகம் சம்பாதித்து வருகிறார். இசை கச்சேரிகளை அதிகமாக நடத்தி அதன் மூலமாக சம்பாதித்து வருகிறார் அனிருத்.

அந்த வகையில் ஏற்கனவே பெங்களூரில் அவர் போட்ட இசை கச்சேரி அதிக பிரபலமானது. அதற்கான டிக்கெட் ஓப்பன் ஆன ஒரு மணி நேரத்திலேயே அனைத்துமே புக்கிங் ஆகி முடித்தது.

இந்த நிலையில் சென்னையில் 30000 டிக்கெட் தீர்ந்து விட்டன. அந்த அளவிற்கு அனிருத்துக்கான ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். டிக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாமா என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

மேலும் டிக்கெட் ஓபன் ஆகி 30 நிமிடங்களில் 30000 டிக்கெட் விற்றது ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

To Top