Connect with us

ஜூலை மாசத்துக்குள்ள முடிக்கணும்.. பெரும் நெருக்கடியில் சிக்கிய அனிரூத்..!

Tamil Cinema News

ஜூலை மாசத்துக்குள்ள முடிக்கணும்.. பெரும் நெருக்கடியில் சிக்கிய அனிரூத்..!

Social Media Bar

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பிசியாக இருக்கும் ஒரு இசையமைப்பாளராக அனிருத் இருந்து வருகிறார். பெரும்பாலும் அனிருத் இசையமைக்கிறார் என்றாலே அந்த படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் வெற்றியை கொடுத்து விடும் என்று கூறலாம்.

அதனால்தான் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து பாலிவுட்டிலும் இசையமைக்க இருக்கிறார் அனிருத்.

இந்த நிலையில் தற்சமயம் கூலி திரைப்படத்திற்கான இசையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அனிருத். ஏனெனில் பெரும்பாலும் ரஜினிக்கு அனிருத் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன.

கூலி திரைப்படத்திலும் அந்த மாதிரியான பாடல்கள் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் அனிருத். அதே சமயம் கிங்டம் என்கிற ஒரு திரைப்படத்திற்கும் அனிரூத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் இசையமைப்பதற்கு மட்டும் 11 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம் அனிருத். இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களுமே ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வர இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கான இசை அமைக்கும் வேலையை பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் அனிருத்.

இதனால் மிகுந்த நெருக்கடியில் அவருக்கு இந்த ஜூலை மாதம் இருப்பதாக கூறப்படுகிறது.

To Top