Connect with us

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு இது முன்னோடி!.. ஏ.ஆர் ரகுமான் இசையில் முன்பே வந்த படம்!. எது தெரியுமா?

manjummal boys 127 hours

News

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு இது முன்னோடி!.. ஏ.ஆர் ரகுமான் இசையில் முன்பே வந்த படம்!. எது தெரியுமா?

Social Media Bar

AR Rahman: மலையாளத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மலையாள மொழியில் வரும் திரைப்படத்திற்கு இந்த அளவில் வரவேற்பு இதுவரை இருந்ததில்லை.

 இது தமிழ் திரையுலகை சேர்ந்த பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பெரும் நடிகர்களின் திரைப்படத்திற்கு மட்டும் தான் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தமிழ் தயாரிப்பாளர்கள் நினைத்திருந்த நிலையில் நல்ல திரைக்கதைகளுக்கும் தமிழ் சினிமாவில் வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்து இருக்கிறது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்.

manjummel-boys-malayalam
manjummel-boys-malayalam

கதைப்படி கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்கள் கூட்டம் ஒன்று குணா குகையை பார்ப்பதற்காக செல்கிறது. அங்கு எதிர்பாராத விதமாக ஒருவர் குழியில் மாட்டிக் கொள்ளவே அவரை காப்பாற்ற நடக்கும் விஷயங்களே படத்தின் கதையாக இருக்கிறது.

ஹாலிவுட்டில் வந்த திரைப்படம்

இதை சர்வைவல் திரில்லர் என்னும் வகை படம் என கூறுவார்கள் இந்த மாதிரியான திரைப்படங்கள் உலகம் முழுவதும் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் மாட்டிக்கொள்ளும் விதம் வேறு மாதிரியாக இருக்கும். இப்படி 2010 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் 127 ஹவர்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது.

கிட்டத்தட்ட இதுவும் நிஜக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான். ஜேம்ஸ் ஃப்ராண்ட்கோ என்பவர் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். டேனி போயல் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

படத்தின் கதைப்படி மழை இடுக்கில் ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும் ஒரு நபருக்கு கைகள் பாறையில் மாட்டிக்கொள்ளும். அந்த கைகளை எடுத்துவிட்டு அவரால் வெளியே வர முடியாது. இந்த நிலையில் தனது கையை வெட்டி எடுத்துவிட்டு அவர் அந்த குகையை விட்டு வெளியேறுவதுதான் கதை.

இப்படி அவர் வெளியேறுவதற்கு மொத்தம் 127 மணி நேரங்கள் ஆகிவிடும் அந்த 127 மணி நேரத்தில் சாப்பாடு, தண்ணீர் இந்த மாதிரியான விஷயங்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதெல்லாம் படத்தில் கதையாக செல்லும்.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். கிட்டத்தட்ட மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தோடு ஒத்துப்போகிறது இந்த படம். ஒருவேளை இந்த இயக்குனருக்கு படத்தை எடுப்பதற்கான ஆலோசனை இந்த படத்தில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top