Connect with us

கில்லியை விட வசூல் குறைவா?.. அரண்மனை 4 முதல் நாள் வசூல் நிலவரம்!..

aranmanai 4

News

கில்லியை விட வசூல் குறைவா?.. அரண்மனை 4 முதல் நாள் வசூல் நிலவரம்!..

Social Media Bar

முறைமாமன் என்கிற காமெடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. தொடர்ந்து காமெடி திரைப்படங்கள் இயக்கி வந்தாலும் அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான மாறுப்பட்ட திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் அரண்மனை திரைப்படங்கள் முக்கியமானவை. பொதுவாக லாரன்ஸ் இயக்கும் பேய் திரைப்படங்களில் யாரோ ஒருவரால் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பேய் அவரை பழி வாங்குவதற்காக லாரன்ஸ் உடலில் புகும்.

thammanna aranmanai 4
thammanna aranmanai 4

ஆனால் அரண்மனை படங்களை பொறுத்தவரை பேய் யாராவது ஒருவரை பழிவாங்க இருக்கும். கதாநாயகன் அந்த பேயிடம் இருந்து அவர்களை பாதுகாப்பதே படத்தின் கதையாக இருக்கும். இதனாலேயே அரண்மனை திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

இந்த நிலையில் நேற்று அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியானது. முதல் நாள் ஓரளவு வரவேற்பு இருந்தது என்றாலும் முதல் நாள் வசூல் அவ்வளவாக வியப்படையும்படி இல்லை. மொத்தமாக முதல் நாள் 3.50 கோடி வசூல் செய்துள்ளதாம் அரண்மனை 4.

மறு வெளியீடான கில்லி திரைப்படமே இதை விட அதிகமான முதல் நாள் வசூலை கொடுத்தது. எனவே இது குறைவான வசூல்தான் என கூறப்படுகிறது.

To Top