Actor Arjun : தமிழ் சினிமாவில் பல வருடங்களாகியும் வயதாகாமல் இருக்கும் சில நடிகர்களில் நடிகர் அர்ஜுனும் ஒருவர். தென்னகத்து புரூஸ்லி ஆக்ஷன் கிங் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அர்ஜுன். அவரது இளமை காலங்களில் நிறைய படங்களில் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்திருப்பார்.
அதனால்தான் அவருக்கு அந்த ஆக்ஷன் கிங் என்கிற பெயரே வந்தது அப்போதிலிருந்து இப்போது வரை சரியாக உடற்பயிற்சி செய்து வயது தெரியாமல் தன்னை காட்டி வருகிறார் அர்ஜுன். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் இன்னமும் கிடைத்து வருகிறது. 1990 க்கு பிறகு அர்ஜுனுக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் முதல்வன், ஜென்டில்மேன், ஜெய் ஹிந்த் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்கள் சினிமாவிற்கு வர துவங்கிய பிறகு அர்ஜுனுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
அர்ஜுனுக்கு நடந்த சம்பவம்:
இருந்தாலும் கிரி, மருதமலை, ஏழுமலை போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார் அர்ஜுன். இந்த நிலையில் அர்ஜுனுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக மங்காத்தா திரைப்படம் அமைந்தது. மங்காத்தா திரைப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார் அர்ஜுன்.
அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததால் தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கிரி திரைப்படத்தில் உள்ள காமெடிகள் குறித்து அர்ஜுன் பேசும்போது நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அர்ஜுனை பொருத்தவரை கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் என்று தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது கிரி திரைப்படத்தில் தனது அக்கா குறித்த ரகசியத்தை வடிவேலு கூறிய பிறகு மறுநாளே அது ஊருக்கே தெரிந்திருக்கும். ஆனால் அர்ஜுன் இரவு முழுவதும் வடிவேலுவுடன் தான் உறங்கி இருப்பார். பிறகு எப்படி அந்த செய்தி வெளியே வந்தது என்று அந்த படம் வெளியான பிறகு பலரும் அர்ஜுனிடம் கேட்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இயக்குனரே அந்த காட்சிக்கு விளக்கம் கொடுக்கவில்லை. அதனால் எனக்கு அந்த செய்தி எப்படி வெளியில் வந்தது என்பது தெரியாது என்று தனது பேட்டியில் கூறியிருக்கிறார் அர்ஜுன். மேலும் திரைப்படங்களில் காமெடி நடிகர்களுடன் நடிக்கும் போது அர்ஜுனுக்கு அதிகமாக சிரிப்பு வந்துவிடும் இதன் காரணமாக அந்த காட்சிகள் திரும்பத் திரும்ப எடுக்கப்படும் என்று அவர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.






