Tamil Cinema News
அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா.. நீ என்ன கிழிச்சிட்ட.. இயக்குனர் மிஸ்கினை மேடையிலேயே வச்சி செய்த பிரபலம்!
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் ஒருவர் அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சில காலங்கள் மிஸ்கினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தன.
அந்த சமயத்தில் அவர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியாக அவர் நடித்த மாவீரன், லியோ மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தன. அதே சமயம் திரைப்படங்களை இயக்குவதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சமீப காலங்களாக அவர் நிறைய மேடைகளில் பேசி வருகிறார். அப்படி அவர் பேசும் விஷயங்கள் அதிக ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அருள்தாஸ் மேடையில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது பெண் பத்திரிக்கையாளர் பெண்கள் என பலரும் இருக்கும்போது மேடையில் தகாத வார்த்தையில் பேசுவது தவறான விஷயமாகும். இந்த மேடைகள் ஆயிரக்கணக்கான நபர்களை பார்த்துள்ளன.
இந்த மேடைக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. நண்பர்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். ஆனால் மேடைக்கு என்று ஒரு நாகரிகள் உள்ளது. இத்தனை புத்தகம் படித்தும் மிஸ்கினுக்கு அதுக்குறித்த அறிவு இல்லை.
அந்த மேடையில் இருந்த வெற்றிமாறன், பா. ரஞ்சித் எல்லாம் இயல்பு மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கிய பெரும் இயக்குனர்கள். ஆனால் நீ உலக சினிமாவை காப்பியடித்து படம் எடுத்தவன். உனக்கு அவங்களை விட நீ பெரிய அப்பட்டக்கர்னு நினைப்பா என வெளிப்படையாக பேசியிருந்தார் அருள்தாஸ்.
