Tamil Cinema News
ஆசிட் அடிப்பேன்.. அர்ச்சனாவுக்கு வந்த மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.. வினையாக மாறிய பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் விஜய் டிவி பிரபலங்களின் ஊடுருவல் தற்சமயம் அதிகமாகி இருக்கிறது. பொதுவாகவே விஜய் டிவியில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும்தான் விஜய் டிவி இல்லாத வேறு பிரபலங்களும் கலந்து கொள்வதை பார்க்க முடியும். ஆனால் இந்த முறை பிக்பாஸிலும் அதிகமாக விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்படியாக கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் அருண் பிரசாத் முக்கியமானவர். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அருண் பிரசாத். பிக் பாஸ் சீசன் 7ல் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நடிகை அர்ச்சனாவை காதலித்து வருகிறார் அருண் பிரசாத்.
பிக்பாஸ் சீசன் 8:
இது அனைவருமே அறிந்த விஷயம்தான் இந்த நிலையில் அருண் பிரசாத்துக்கும் முத்துக்குமரனுக்கும் இடையே தொடர்ந்து பிக்பாஸில் சண்டைகள் ஏற்பட்டு வருகிறது. வாரா வாரம் இருவருக்கும் இடையே ஏதாவது ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த வாக்குவாதத்தின் காரணமாக அவர்களது ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் ரசிகர்கள் சிலர் அர்ச்சனாவை மிரட்டத் துவங்கியிருக்கின்றனர்.
ஆசிட் அடித்து விடுவேன் என்றெல்லாம் ரசிகர்கள் மிரட்டுவதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிருக்கும் அர்ச்சனா இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்து இருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறும்போது இவ்வளவு மோசமான வார்த்தைகளை வெளிப்படுத்த என்ன காரணம் என்று தெரியவில்லை.
பிக் பாஸ் ஒரு விளையாட்டுதானே தவிர அது நிஜம் கிடையாது முத்துக்குமரனின் பெயரைக் கொடுக்கும் விதமாகவும் இப்படி செயல்படாதீர்கள் என்று பேசி இருக்கிறார்.