காதலிக்க கூட விடமாட்டாங்க போல.. சேத்தனை வம்பு செய்து கலாய்த்த சிறுவன்!..

சில நடிகர்கள் சின்னத்திரையில் சிறப்பாக நடிப்பவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு வெள்ளி திரையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்திருக்கும். அதனால் அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்திருக்கும். அப்படி 90ஸ் காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சேத்தன்.

சேத்தன் நடித்த நாடகங்களில் மெட்டி ஒலி, மர்மதேசம் போன்றவை அவரது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய முக்கியமான நாடகங்கள் ஆகும். தற்சமயம் விடுதலை திரைப்படத்திலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சேத்தன்.

மர்ம தேசம் நாடகத்தின் படப்பிடிப்பு நடக்கும் பொழுது அதில் அவருடன் நடித்த நடிகை பிரியதர்ஷினியை சேத்தன் காதலித்தார். பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். காதலித்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் காபி ஷாப் ஒன்றில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

 அப்போது அந்த காபி ஷாப்புக்கு எதிர் வீட்டில் ஒரு சிறுவன் இருந்தானாம். அந்தச் சிறுவன் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் நேரம் பார்த்து சரியாக அங்கு வந்து நின்று கொண்டு மர்ம தேசம் என்று கத்திவிட்டு ஓடிவிடுவானாம். இதைத் தொடர்ந்து அந்த சிறுவன் செய்துள்ளான்.

 இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய சேத்தன் இந்த சிறுவன் யார் என்று தான் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.