All posts by Tom

பாலிவுட்டில் உருவாகும் எல்.சி.யு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்த பிறகும் லோகேஷ் கனகராஜ் இன்னும் பாலிவுட் திரைப்படங்களை இயக்காமல் இருக்கிறார்.

பெரிதாக வளரும் இயக்குனர்களுக்கு எப்பொழுதுமே பாலிவுட்டில் வாய்ப்புகள் வருவது உண்டு. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்க்கு அப்படியான வாய்ப்புகள் வந்ததா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லோக்கி  மாநகரம் திரைப்படத்திற்கு பிறகே எனக்கு வாய்ப்புகள் வந்தது ஆனால் அந்த படத்தை திரும்ப எடுக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

அதேபோல கைதி திரைப்படத்திற்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கும் கூட எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் செய்த வேலையை திரும்ப செய்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் என்று நான் நினைத்தேன்.

அதனால் ஹிந்தியில் படம் பண்ணாமலே இருந்தேன். தற்சமயம் கூலி திரைப்படத்திற்காக அமீர்கானிடம் சந்தித்து பேசிய பொழுது அவருடைய நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. அமீர் கானுக்கும் என்னுடைய வேலை பிடித்திருந்தது.

கூலி திரைப்படத்தில் நானும் அவரை காட்டியிருந்த விதம் அவருக்கே புதிதாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கென்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். எனவே பாலிவுட்டில் அமீர்கானை வைத்து ஒரு படம் இயக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

பெரும்பாலும் கூலி திரைப்படத்தில் வரும் அமீர்கானின் கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி அந்த கதை உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ஸ்டாரில் வரும் காமெடி போலீஸ் சீரிஸ்.. Police Police hotstar TV Series

ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் வாங்கியது முதலே நிறைய புது புது சீரியஸ்கள் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது.

முக்கியமாக இந்தியாவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் நிறைய விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. தமிழிலும் நிறைய தொடர்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறது ஹாட்ஸ்டார் நிறுவனம். அந்த வகையில் தற்சமயம் போலீஸ் போலீஸ் என்கிற ஒரு சீரிஸை ஹாட் ஸ்டார் உருவாக்கி இருக்கிறது.

சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக பிரபலம் அடைந்த நடிகர் செந்தில் இதில் போலீஸாக நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் முழுக்க முழுக்க ஒரு காமெடியான சீரிஸாக இருக்கும் என்று தெரிகிறது.

இதன் ப்ரோமோ இப்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. விரைவில் இது எப்போது வெளியாகும் என்கிற தேதியும் சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா இண்டஸ்ட்ரிய நாறி போய் கிடக்கு.. படுக்க கூப்பிடுறாங்க.. பிரபலங்கள் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த சனம் ஷெட்டி..!

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் என்பது தொடர்ந்து சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவில் நடிகைகள் வாய்ப்பை பெறுவதற்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தில் வரும் நடிகர்கள் போன்றவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்ள வேண்டும் என்பது வெளிப்படையாகவே சினிமாவில் இருந்து வருகிறது.

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை சினிமாவில் இது ஒரு மாறாத விஷயமாக இருக்கிறது. அதனால்தான் சினிமா துறை மட்டும் இப்பொழுதும் மக்களால் பெரிதாக மதிக்கப்படாத ஒரு துறையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி குறித்து வெளியான ஒரு எக்ஸ் தல பதிவின் காரணமாக அதிக சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி பதில் அளித்தும் இருந்தார்.

இந்த நிலையில் சனம் ஷெட்டி இது குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது எனக்கும் இந்த மாதிரியான டார்ச்சர்கள் இருந்தன. முதலில் இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது அவ்வளவு மோசமாக எல்லாம் சினிமாவில் நடந்து கொள்ள மாட்டார்கள் என்று தான் நினைப்போம்.

ஆனால் உண்மை அது கிடையாது அவர்கள் நேரடியாகவே கேட்பார்கள் எனக்கு அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களின் திட்டம் என்னவென்று புரிந்துவிடும்.

எனவே நானே விலகி விடுவேன். அது அப்படியே போய் இப்போதெல்லாம் ஏதாவது ஒரு பெரிய படத்தில் வாய்ப்புகள் கிடைப்பதாக இருந்தால் கூட நான் வருகிறேன் என்றால் கதவை சாத்தி விடுவார்கள். ஏனெனில் நான் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துவர மாடேன் என்று அவர்களுக்கு தெரியும்.

திறமைக்கு எல்லாம் சினிமாவில் இப்பொழுது வேலையே இல்லை சினிமா முழுக்க முழுக்க நாறிப் போய்தான் கிடக்கிறது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் சனம் ஷெட்டி.

சமூக பிரச்சனையை கையில் எடுத்த பரிதாபங்கள் சேனல்.. இணையத்தில் இப்போ இதான் ட்ரெண்டிங்..!

யூ ட்யூப்பை பொறுத்தவரை ஒரு கேளிக்கைக்கான விஷயமாகதான் யூ ட்யூப் எப்போதும் இருந்து வருகிறது. மக்களும் பெரும்பாலும் கேளிக்கை தொடர்பான விஷயங்களை பார்ப்பதற்காகதான் யூ ட்யூப் வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான யூ ட்யூப் சேனல்களில் முக்கியமான சேனலாக பரிதாபங்கள் சேனல் இருந்து வருகிறது.

சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளை காமெடியாக இந்த சேனலில் உள்ள கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் பேசி வருகின்றனர். திருமண பரிதாபங்கள், உறவினர் பரிதாபங்கள், கல்லூரி பரிதாபங்கள் என பலதரப்பட்ட வீடியோக்களை இவர்கள் பதிவிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இவர்கள் அரசியல் சார்ந்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். பல அரசியல்வாதிகளை காமெடியாக சித்தரித்து அவர்கள் இந்த வீடியோக்களை செய்திருந்தனர். இதனால் இவர்களுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன.

எனவே அந்த மாதிரி வீடியோக்கள் போடுவதை இவர்கள் நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து சாதிய படுகொலைகள் நடப்பதை தொடர்ந்து சாதிய வாதிகளை குறித்து அவர்கள் உருவாக்கி இருக்கும் வீடியோதான் சொசைட்டி பாவங்கள்.

இந்த வீடியோவிற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.  இப்போது இணையத்தில் இந்த வீடியோ அதிக வைரலாகி வருகிறது.

தமிழில் தேசிய விருதை பெற்ற இரண்டு முக்கிய நடிகர்கள்.. இப்பவாச்சும் கொடுத்தாங்களே..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும் நடிகர்களின் நடிப்புக்கு எப்போதுமே அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைவது கிடையாது.

இந்த மாதிரி பெரிதாக நடிக்க தெரியாமல் அதே சமயம் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

பெரிதாக துணை கதாபாத்திரமாக வருபவர்களை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம். ஆனால் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும்போது அவர்களும் கூட தனித்துவமாக தெரிய துவங்குவார்கள். அந்த வகையில் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் தெரிந்தவர்தான் நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.

துணை கதாபாத்திரமாக நடித்த இவருக்கு எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை விட அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் பார்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

அதே மாதிரி பாக்கியராஜ் காலத்தில் இருந்தே நடித்து வருபவர் நடிகை ஊர்வசி. இவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு Ullozhukku என்கிற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

பிகினி உடையில் வீடியோ வெளியிட்ட பலூன் அக்கா.. இப்போ இதுதான் செம வைரல்..

மூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலமானவர்கள் நிறைய பேர் உண்டு. அந்த வகையில் அதிக பிரபலமானவர் அரூரா சிங்க்ளர். இவர் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிக பிரபலமானவராக இருந்தார்.

ஆனால் இப்போது அந்த அளவிற்கு அவர் பிரபலமாக இல்லை. இருந்தாலும் கூட அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது, வீடியோக்கள் வெளியிடுவது என இன்ஸ்டாவில் இவர் ஆக்டிவாகதான் இருந்து வருகிறார்.

அந்த வகையில் அரூரா சிங்க்ளர் தற்சமயம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

மாடர்ன் உடையில் ரசிகர்களை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தமிழில் அறிமுகமாகும் பொழுதே சர்ச்சையான நடிகராக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் கதை தேர்ந்தெடுப்புகள் காரணமாக தமிழ் சினிமாவில் சீக்கிரத்திலேயே அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைந்து போனது.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் சந்தானத்திற்கு தங்கையாக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன.

ஒரே வாரத்தில் இவ்வளவு வசூலா.. சாதனை படைத்த இந்திய அனிமேஷன் திரைப்படம்..!

கே ஜி எஃப், சலார் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் திரைப்படம் தற்சமயம் தொடர்ந்து சாமி திரைப்படங்களாக இயக்கி வருகிறது.

காந்தாரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நிறைய சாமி படங்களை இயக்கி வருகிறது ஹம்பாலே பிலிம்ஸ். அந்த வகையில் தற்சமயம் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம்நான் மகா அவதார் நரசிம்மா.

விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான ஒரு அவதாரமாக நரசிம்மா அவதாரமாக பார்க்கப்படுகிறது. பழைய ங்காலங்களில் இருந்தே இரணிய கசிபு மற்றும் நரசிம்ம அவதாரத்தின் கதையானது நாடகங்களாக இந்திய அளவில் போடப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் இதை அனிமேஷன் திரைப்படமாக அஸ்வின் குமார் என்கிற இயக்குனர் இயக்கி இருந்தார். கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாக இந்திய மக்கள் மத்தியில் அனிமேஷன் படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடையாது.

ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் 40 கோடி வசூல் செய்து இருக்கிறது. எந்த ஒரு பெரிய கதாநாயகனும் நடிக்காமல் பெரிய இயக்குனர் இயக்காமல் உருவான ஒரு அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் இனி அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்திய சினிமாவில் ஒரு மார்க்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி படத்தின் கதை இதுதான்.. ட்ரைலரில் லீக் ஆன படக்கதை..!

நேற்று ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்த அப்டேட் வந்த நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் யார் வில்லம் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை.

ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு கதை அமைப்பு கொண்ட திரைப்படம் என்பது மட்டும் டிரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அதன்படி தேவா என்கிற கதாபாத்திரம் பல பெரிய விஷயங்களை செய்து கேங்ஸ்டர் கும்பலுடன் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்ட ஒருவராக அறியப்படுகிறார்.

ஆனால் சில காலங்களுக்கு பிறகு தேவா காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. பாட்ஷா திரைப்படத்தில் வருவது போலவே தேவா இறந்துவிட்டார் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேவா ஒரு துறைமுகத்தில் கூலி வேலை பார்ப்பவராக பல வருடங்களாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்னும் சாகவில்லை என்கிற செய்தி இந்த ரவுடி கும்பலுக்கு மீண்டும் தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர் அந்த துறைமுகத்தில் தான் வேலை பார்க்கிறார் என்கிற செய்தியும் வருகிறது.

இதனை அடுத்து தேவா மீண்டும் களத்தில் இறங்குகிறார் அதற்கு பிறகு அவர் எப்படி இந்த வில்லன்களை ஒழிக்கிறார்என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..

நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார்.

கார் ரேஸில் கலந்து கொள்ளும் சமயங்களில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அதே போல திரைப்படங்களில் நடிக்கும் சமயங்களில் கார் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் கார் ரேஸில் கலந்து கொள்ளும் பொழுது அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அந்த மாதிரி ஏற்பட்டால் படப்பிடிப்புகளில் அது பிரச்சனையை ஏற்படுத்தும் படப்பிடிப்பு முடிவதிலும் தாமதமாகும் என தயாரிப்பாளர் நலனை கருத்தில் கொண்டு அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

ஏனெனில் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறார் அஜித்.

இந்த படத்தை எடுப்பதற்கு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்து இருக்கிறார் அஜித். அந்த வகையில் அக்டோபர் மாதம் துவங்கும் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அவருக்கு கூறப்பட்டுள்ளது.

எனவே முதலில் அஜித்துக்கான காட்சிகளை மட்டும் மூன்று மாதத்திற்குள் எடுத்துவிட்டு மீத காட்சிகளை தாமதமாக எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித் படம் பெற்ற அதே தகுதியை பெற்ற ஹரிஸ் கல்யாண் படம்.. 

2023 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங்.

சாதரணமாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. ஆனால் அதையே ஒரு கதைக்களமாக உருவாக்கி அதை வைத்து பெரிய பெரிய விஷயங்களை அந்த திரைப்படத்தில் செய்திருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

இந்த நிலையில் பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் தற்சமயம் கிடைத்து இருக்கிறது. பெரும்பாலும் அறிமுக இயக்குனர்கள் படங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தேசிய விருதுகள் கிடைத்துவிடாது. ஆனால் ராம்குமாருக்கு தனது ஆரம்ப நிலையிலேயே இப்படி ஒரு தேசிய விருது கிடைத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

parking

அவரது சினிமா வாழ்க்கையிலும் இனி தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றிருக்கிறது இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை காதல் மன்னன் திரைப்படம் பெற்றது.

அந்த திரைப்படத்திற்குப் பிறகு அதே அளவிலான ஒரு தகுதியைப் பெற்றிருக்கிறது ஹரிஷ் கல்யாண் நடித்த பார்கிங் திரைப்படம்.

 

பல பேரிடம் கை மாறிய தலைவன் தலைவி திரைப்படம்.. இப்படி பண்ணிட்டாங்களே..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி.

தலைவன் தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் முதலில் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் கூட போக போக படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது.

இப்போது திரையரங்குகளில் தொடர்ந்து அதிக வசூல் செய்து வருகிறது தலைவன் தலைவி திரைப்படம். தொடர்ந்து குடும்ப படமாக எடுத்து வரும் பாண்டிராஜ் மீண்டும் எடுத்திருக்கும் குடும்ப திரைப்படம் தான் தலைவன் தலைவி திரைப்படம்.

இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட இந்த கதையை ஆரம்பத்தில் பலரும் நிராகரித்து இருக்கின்றனர்.

குடும்ப திரைப்படங்கள் எல்லாம் இப்போது ஓடாது என்கிற கருத்து பலரது மத்தியில் இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து குடும்ப படங்களாக எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த வகையில் தலைவன் தலைவி திரைப்படமும் கூட எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுத்து வருகிறது.

தற்சமயம் இந்த படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் பல தயாரிப்பாளர்களிடம் சென்று பிறகு கைமாறிதான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வசம் வந்துள்ளது.

இதற்கு முன்பு இந்த திரைப்படம் மாஸ்டர் லியோ போன்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமாரிடம் சென்றிருக்கிறது. ஆனால் அந்த படத்தை அவர் எடுக்கவில்லை.

பிறகு சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி எங்கிருந்த நிறுவனமும் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருக்கிறது. அதேபோல ஜெயம் ரவியின் முன்னாள் மாமியாரிடமும் இந்த கதை சென்று இருக்கிறது. அப்பொழுது இந்த படத்தில் ஜெயம் ரவி தான் கதாநாயகனாகவும் நடிக்க நடிப்பதாக இருந்தது.

ஆனால் பட்ஜெட் ரீதியாக ஏற்பட்ட குழப்பத்தினால் அவரிடம் இருந்தும் விலகி விட்டார் பாண்டிராஜ். இப்படி பலரிடம் கைமாறிதான் கடைசியாக சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.