நீங்க சொல்ற க்ளைமேக்ஸ்லாம் படத்துல கிடையாது!.. ரஜினி பேச்சை மீறி க்ளைமேக்ஸை மாற்றிய ஏ.வி.எம் சரவணன்.. எந்த படம் தெரியுமா?

ரஜினி திரைப்படங்கள் என்றாலே எப்போதுமே அதற்கு தனி வரவேற்பு உண்டு. பெரும் நடிகர்கள் என்றாலே படங்களின் கதையில் தலையிடுவது என்பது வாடிக்கையாக நடக்கும் சமாச்சாரமாகும். ஆனால் ரஜினிகாந்தை பொறுத்தவரை பெரிதாக இந்த மாதிரி கதைகளில் குறுக்கிட மாட்டார்.

அதே மாதிரி படத்தின் கதைகளில் இயக்குனரை தவிர வேறு யாரும் தலையிட கூடாது என்பதிலும் மிக தெளிவாக இருப்பார் ரஜினி. இந்த நிலையில்தான் ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் நல்லவனுக்கு நல்லவன் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த்.

Social Media Bar

ரஜினிகாந்த் நடித்து அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நல்லவனுக்கு நல்லவன் திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை அமைதியான ஒரு க்ளைமேக்ஸாகதான் படத்தின் இயக்குனர் அமைத்திருந்தார்.

ஆனால் ஏ.வி.எம் சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. எனவே இயக்குனர் எஸ்.பி முத்துராமிடம் சண்டை காட்சிகள் வைத்து க்ளைமேக்ஸ் வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ரஜினிகாந்துக்கும், இயக்குனருக்கும் அதில் உடன்பாடு இல்லை.

இருந்தாலும் தயாரிப்பாளர் சொல்லும்போது வேறு வழியில்லை என படத்தின் க்ளைமேக்ஸை மாற்றினர். ஆனால் அந்த க்ளைமேக்ஸிற்குதான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்வை ஏ.வி.எம் சரவணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.