போஸ்டர் காசு கூட வரலையாம்!.. அயலான் திரைப்படத்தால் அதிர்ச்சியடைந்த விநியோகஸ்தர்!.. கேரளாவில் தரை தட்டிய அயலான்!.

Sivakarthikeyan Ayalaan : சிவகார்த்திகேயன் சம்பளம் கூட வாங்காமல் நடித்த திரைப்படம்தான் அயலான். கடந்த 12ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என்பது சிவகார்த்திகேயனின் என்னமாக இருந்தது.

ஏனெனில் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு பெரும் பட்ஜெட்டில் ஒரு ஏலியன் திரைப்படம் இதுவரை தயாராகவில்லை. இந்த திரைப்படம் ஆறு வருடங்களாக தயாராகி வந்தது. இந்த திரைப்படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டு சென்று ஆக வேண்டும் என்பதற்காகவே சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் இதில் நடித்திருக்கிறார்.

ஆனால் திரைக்கு வந்த இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும். தமிழிலேயே இதுவரை இந்த திரைப்படம் முப்பது கோடிக்கு அதிகமாக வசூல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Social Media Bar

இந்த நிலையில்  இனிமேல்தான் தெலுங்கில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. மலையாளத்தை பொருத்தவரை படம் படுதோல்வியைக் கண்டுள்ளது என்று கூறப்படுகிறது. மலையாளத்தில் இந்த திரைப்படத்தை 70 லட்சத்திற்கு வாங்கி இருக்கின்றனர்.

ஆனால் படத்தின் போஸ்டருக்கு ஒதுக்கிய தொகை கூட வசூலில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களுக்கு இந்தியாவில் பெரிதாக மதிப்பு கிடையாது என்கிற பேச்சு பரவலாக உண்டு.

ஏனெனில் ஆங்கில சினிமாக்களில் அனிமேஷன் திரைப்படங்களைக் கூட பெரியவர்கள் பார்ப்பார்கள். அதனால் அந்த திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கும். ஆனால் தமிழை பொறுத்தவரை குழந்தைகளுக்கான திரைப்படத்தை குழந்தைகள் கூட பார்ப்பதில்லை என்றே கூறலாம். எனவே தான் அயர்லாந்து திரைப்படம் இப்படியான ஒரு தோல்வியை கண்டுள்ளது என்று கூறப்படுகிறது.