News
காமெடியனாக களம் இறங்கும் பகத் ஃபாசில்!.. அப்ப வேட்டையன் படத்தில் வில்லன் யாரு?
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.
அந்த படத்திற்கு இப்போது வரை பெரிதாக விளம்பரப்படுத்த படாததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த படத்திலும் ரஜினிகாந்த் போலீஸாகதான் நடிக்கிறார். மேலும் அடுத்து நடிக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ் படத்திலும் அவர் போலீசாகதான் நடிக்க போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தில் இவருடன் பகத்ஃபாசில், ராணா டகுபதி, அமிதாப்பச்சன் மாதிரியான பல முக்கிய புள்ளிகள் நடித்து வருகின்றனர். மாமன்னன் திரைப்படத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்ததை அடுத்து வேட்டையன் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார் பகத் ஃபாசில் என பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் உண்மையில் அந்த படத்தில் பகத் ஃபாசில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராணா டகுபதிதான் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தற்சமயம் அவர்களுக்கிடையேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் வேட்டையன் திரைப்படத்தை விடவும் லோகேஷ் ரஜினி காம்போ படத்திற்குதான் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
