Connect with us

ஓ நீங்க பிரபுவை காதலிக்கிறீங்களா? குஷ்புவை விட்டுக்கொடுத்த கார்த்தி!.. ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!.

khusboo prabhu

News

ஓ நீங்க பிரபுவை காதலிக்கிறீங்களா? குஷ்புவை விட்டுக்கொடுத்த கார்த்தி!.. ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!.

Social Media Bar

Actress Kushboo: வருசம் 16 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. வட இந்தியாவில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்திருந்தாலும் கூட அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவருக்கு அதிகமாக கிடைத்தது.

ஆனால் வருஷம் 16 திரைப்படத்திற்கு பிறகு குஷ்பு பெரிதாக கார்த்தியின் படங்களில் நடிக்கவே இல்லை. இத்தனைக்கும் அப்போது கார்த்தியும் பிரபலமான ஹீரோவாகதான் இருந்து வந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து அப்போதே சில கிசு கிசுக்கள் இருந்து வந்தன.

அதாவது கார்த்தியும் குஷ்புவும் வெகு நாட்களாகவே நல்ல நட்பில் இருந்து வந்துள்ளனர். ஆனால் சில காலங்களுக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ சண்டை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே குஷ்பு கதாநாயகியாக நடிக்கிறார் என்றாலே அந்த படம் வேண்டாம் என்று கார்த்தி நிராகரித்துவிடுகிறார்.

குஷ்புவின் காதல் கதை:

அதே போல கார்த்தி படங்களை குஷ்புவும் நிராகரித்துவிடுகிறார் என பேச்சுக்கள் இருந்தன. இதுக்குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்போது இன்னும் சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதாவது அப்போதைய காலக்கட்டத்தில் குஷ்புவும் நடிகர் பிரபுவும் காதலித்து வந்தனர்.

பிரபு நடிக்கும் அதிக படங்களில் குஷ்பு கதாநாயகியாக இருப்பதை பார்க்க முடியும். பிரபுவும் கார்த்தியும் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே நண்பர்களாக இருந்து வந்தனர். குஷ்புவும் பிரபுவும் காதலித்து வரும் விவகாரம் கார்த்திக்கு தெரியும்.

எனவே அவர் தனது நண்பனின் காதலியுடன் திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தார். அதனால்தான் அவர் குஷ்புவுடன் நடிக்கவில்லை என கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

To Top