Connect with us

ரைட்டு சம்பவம் இருக்கு.. பெரியார் அரசியல் பேசும் பாலாவின் வணங்கான் திரைப்படம்!..

News

ரைட்டு சம்பவம் இருக்கு.. பெரியார் அரசியல் பேசும் பாலாவின் வணங்கான் திரைப்படம்!..

Social Media Bar

தமிழில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா திரைப்படத்தில் நடித்தாலே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவருக்கு ஒரு நல்ல பெயர் உண்டு.

ஆனால் பாலா படத்தில் நடிப்பவர்கள் பாவம் எனவும் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் ஒரு காட்சி எடுத்து முடிப்பதற்குள் நடிக்கும் நடிகரை பாடாய் படுத்திவிடுவாராம் பாலா. இந்த நிலையில் பாலா இயக்கத்தில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம்தான் வணங்கான்.

இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிக்கவிருந்தார். ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. இதனையடுத்து நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில் தற்சமயம் வணங்கான் படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த போஸ்டரில் சேற்றில் இருந்து எழுந்து வந்து நிற்கிறார் அருண் விஜய். அவரது ஒரு கையில் பிள்ளையார் சிலையும், மற்றொரு கையில் பெரியார் சிலையும் இருக்கிறது.

எனவே இந்த படம் வலுவான அரசியல் பேசும் படம் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

To Top