Cinema History
படப்பிடிப்பில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாலச்சந்தர்!.. அந்த நிலையிலும் படம் எடுக்க அந்த நடிகைதான் காரணம்!.
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவிற்கே முன்பே பெரும் இயக்குனராக பார்க்கப்பட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் வித்தியாசமான கதையமைப்பில் வந்த திரைப்படங்களாக இருந்தன.
ஒரே மாதிரியான கதையமைப்பில் படம் எடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சத்தில் படம் எடுத்து வந்தார் பாலச்சந்தர். இருந்துமே பாலச்சந்தர் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்து வந்தன.
இயக்குனர் பாரதிராஜா கூட ஆரம்பத்தில் பாலச்சந்தரிடம்தான் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்டார். ரஜினி மற்றும் கமல்ஹாசனை பெரும் நடிகர்களாக்கியதில் பாலச்சந்தருக்கு முக்கிய பங்குண்டு. இயக்குனராக அவரது வேலையில் மிகுந்த கடமையுணர்ச்சி கொண்டவர் பாலச்சந்தர்.
அவரது இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெள்ளி விழா. இந்த படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் வாணி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்திற்காக வாணி ஸ்ரீ மொத்தமே 7 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார்.
எனவே அவருக்கான காட்சிகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டிருந்தார் பாலச்சந்தர். இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது முகம் வேர்த்துவிட்டது. இருந்தாலும் முகத்தை துடைத்துக்கொண்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளார் பாலச்சந்தர்.
ஆனால் சுற்றி உள்ளவர்களுக்கு அவருக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என தெரிந்துள்ளது. எனவே அவர்கள் மருத்துவர்களை அழைத்துள்ளனர். அங்கு வந்த மருத்துவர் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறி பாலச்சந்தரை அழைத்து சென்றுள்ளனர். அந்த அளவிற்கு தொழிலின் மீது பக்தி கொண்டவர் பாலச்சந்தர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்