என்னைய மதிக்காம போறியா!.. இளையராஜாவிற்கு எதிராக பாலச்சந்தர் செய்த சம்பவம்…

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர். சினிமாவிற்கு அவர் அறிமுகமான ஆரம்ப காலகட்டம் முதல் பல திரை நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும் பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டத்தில் துவங்கி ரஜினி கமல் காலகட்டம் வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரும் இயக்குனராக இருந்துள்ளார் பாலச்சந்தர். திரை துறையில் பெரும் புகழ்பெற்றவர்களாக இருப்பவர்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படுவதும் உண்டு.

Social Media Bar

அப்படி இளையராஜாவுக்கும் பாலச்சந்தருக்கும் இடையே ஒரு பிரச்சனையும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் பாலச்சந்தர் தனது திரைப்படங்களுக்கு இளையராஜாவிடமே இசையை பெற்று வந்தார். அப்போது ஒருமுறை இளையராஜாவை பார்ப்பதற்காக அவர் தனது உதவியாளரை அனுப்பி இருந்தார்.

பொதுவாக இளையராஜாவை பார்க்க செல்லும் யாரும் அவரது ஸ்டூடியோ விற்குள் செல்ல மாட்டார்கள். ஆனால் அந்த உதவியாளர் நேராக இளையராஜாவின் ஸ்டுடியோவிற்குள் சென்றார் இதனால் கடுப்பான இளையராஜா அந்த உதவியாளரை ஸ்டுடியோவிற்கு வெளியிலேயே வெகு நேரம் இருக்க வைத்தார்.

 இந்த விஷயத்தை அறிந்த பாலச்சந்தர் கோபமடைந்தார். எனவே அவர் தனது திரைப்படத்திற்கு இளையராஜாவிற்கு பதிலாக கீரவாணியை அறிமுகப்படுத்தினார். அது மட்டுமின்றி அதற்கு பிறகு பாலச்சந்தர் இசையமைத்த பல படங்களுக்கு தொடர்ந்து புதுமுக இசையமைப்பாளர்களையே பயன்படுத்தினார். இளையராஜா ஒருவர் மட்டுமே இசையமைப்பாளராக இருப்பதினால் தான் அவர் இவ்வளவு திமிராக இருக்கிறார் என நினைத்த பாலச்சந்தர் தொடர்ந்து புதுமுக இசையமைப்பாளர்களை வளர்த்து விட ஆரம்பித்தார்.