Connect with us

சந்தானத்துக்கு பதிலா சினிமாவுக்கு வரவிருந்த நடிகர் இவர்தான்!.. எடுத்த ஒரு முடிவில் வாழ்க்கையே மாறிப்போயிடுச்சு!..

santhanam balaji

Cinema History

சந்தானத்துக்கு பதிலா சினிமாவுக்கு வரவிருந்த நடிகர் இவர்தான்!.. எடுத்த ஒரு முடிவில் வாழ்க்கையே மாறிப்போயிடுச்சு!..

Social Media Bar

திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா எனும் நிகழ்ச்சியில் கதாநாயகனாக நடித்து வந்த சந்தானத்திற்கு அதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன்முதலாக லொள்ளு சபாவில் சந்தானம் சேர்ந்த பொழுது அந்த நிகழ்ச்சியில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை.

அப்பொழுது பாலாஜி என்கிற ஒருவர்தான் லொள்ளு சபாவில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் இயக்குனருடன் சேர்ந்துதான் சந்தானம் பணிபுரிந்து கொண்டிருந்தார். 39 எபிசோடுகள் லொள்ளு சபா முடிந்த நிலையில் 40 வது எபிசோடாக தேவர் மகன் திரைப்படத்தை கிண்டல் செய்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறது.

அப்பொழுது லொள்ளு சபா பாலாஜி இயக்குனரிடம் வந்து நான் லொள்ளுசபாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஏன் விலகுகிறீர்கள் என கேட்ட பொழுது எனக்கு சன் டிவியில் வாய்ப்புகள் வந்திருக்கிறது. எனவே நான் அங்கு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார் பாலாஜி.

இதனை அடுத்து தேவர் மகன் படத்தில் சந்தானத்தை கதாநாயகனாக நடிக்க வைக்க துவங்கினார் இயக்குனர் அதனை தொடர்ந்து அடுத்து வந்த அனைத்து லொள்ளு சபா நிகழ்ச்சியிலும் பிறகு சந்தானம் தான் கதாநாயகனாக நடித்தார்.

லொள்ளு சபா பாலாஜி செல்லும் பொழுது  இதற்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று இயக்குனர் கூறி இருக்கிறார் அதேபோல சன் டிவிக்கு சென்ற பிறகு சந்தானம் அளவிற்கு பாலாஜி புகழ் அடையவில்லை திண்டுக்கல் சாரதி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விட்டார் லொள்ளு சபா பாலாஜி.

To Top