Connect with us

காதல் ஜோடிகளை இந்த நிகழ்ச்சியே அறுத்துவிட்டுரும் போல –  டாஸ்க் காரணமாக ரவீனா காதலில் விரிசல்!..

mani raveena

Bigg Boss Tamil

காதல் ஜோடிகளை இந்த நிகழ்ச்சியே அறுத்துவிட்டுரும் போல –  டாஸ்க் காரணமாக ரவீனா காதலில் விரிசல்!..

Social Media Bar

Bigg boss tamil: விஜய் டிவி பிக் பாஸில் தொடர்ந்து டாஸ்க்குகள் போட்டிகள் என வாரம் தோறும் சுவாரசியமாக சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக ஐந்து நபர்களை பிக்பாஸ் போட்டியில் சேர்க்க போவதாக கூறியுள்ளனர்.

தற்சமயம் உள்ள போட்டியாளர்களில் பிரதீப்பிற்கு அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல மாயா மாதிரியான ஒரு சில போட்டியாளர்கள் மீது தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இடையே சண்டையை ஏற்படுத்தும் முக்கியமான விஷயமே அதில் நடத்தப்படும் டாஸ்க் தான்.

அவர்கள் நல்லபடியாக இருந்தாலும் கூட இந்த டாஸ்க்குகள் அவர்களுக்கு இடையே சண்டையை கிளப்பி விட்டு விடும். அந்த வகையில் தற்சமயம் புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அளித்திருந்தார். அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தில் இருந்தும் வீடியோக்கள் வர வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை பார்க்கும் மற்ற போட்டியாளர்களாக அவர்களுக்கு லைக் அல்லது டிஸ்லைட் கொடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரவீனாவும் மணியும் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே பேச்சுக்கள் சென்று கொண்டிருந்தன. அதற்கு ஏற்றார் போல பிக்பாஸிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்த டாஸ்க் என்று வரும் பொழுது அதில் மணிக்கு எதிராக ரவினா டிஸ் லைக் கொடுத்து இருந்தார். இதனால் கோபமானார் மணி. எனவே இவர்கள் இருவருக்கிடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. போற போக்கை பார்த்தால் பிக்பாஸ் முடிவதற்குள் இவர்களுக்கு காதலுக்கு எண்ட் விழுந்துடும் போல என ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் உள்ளன.

To Top