Connect with us

ரஜினி கமலை விட கவுண்டமணி பெரிய ஆள்.. அவர் மார்க்கெட் என்னன்னு பலருக்கு தெரியாது… ஓப்பன் டாக் கொடுத்த பாக்கியராஜ்!..

bhagyaraj gaundamani

Cinema History

ரஜினி கமலை விட கவுண்டமணி பெரிய ஆள்.. அவர் மார்க்கெட் என்னன்னு பலருக்கு தெரியாது… ஓப்பன் டாக் கொடுத்த பாக்கியராஜ்!..

Social Media Bar

Actor Gaundamani: கலர் சினிமா வந்த பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சம் வந்தது. அப்போது புது முகமாக வந்தாலும் கூட மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. அதற்கு அவருடன் சேர்ந்து நடித்த செந்தில் கதாபாத்திரமும் முக்கியமான காரணமாகும்.

பொதுவாக செந்தில் கதாபாத்திரம் உலகம் தெரியாத கதாபாத்திரமாக இருக்கும். அவர் கவுண்டமணியிடம் தெரியாமல் செய்யும் சேட்டைகளை வைத்தே நகைச்சுவை செல்லும். உதாரணமாக மிக பிரபலமான பெட்டர்மாக்ஸ் லைட் காமெடி, வாழைப்பழம் காமெடி எல்லாம் அப்படி அமைந்தவைதான்.

ஆனால் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி கவுண்டமணிக்கு இருந்த மார்க்கெட் என்ன என்பதை பாக்கியராஜ் விளக்கும்போது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும் விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

gaundamani-senthil
gaundamani-senthil

உதாரணமாக தமிழ் சினிமாவில் அப்போது ஹீரோக்களை விடவும் கவுண்டமணியிடம் வாய்ப்பு கிடைப்பதுதான் கடினமான விஷயமாக இருந்துள்ளது. இதனால் ஏதாவது ஹீரோக்கள் படத்தில் கமிட் ஆனால் முதலில் அவர்களிடம் கூறி கவுண்டமணியிடம் கால் ஷீட் வாங்குவதுதான் பெரும் கஷ்டமாக இருக்குமாம்.

அதே போல அன்றைய காலக்கட்டத்தில் கவுண்டமணியை அனைவரும் மணி அண்ணன் என்றுதான் அழைப்பார்களாம். மணி என பெயரை சொல்லி அழைக்க மாட்டார்களாம். அவ்வளவு பயம். ஆனால் பாக்கியராஜும் பாரதிராஜாவும் கவுண்டமணியுடன் முன்பிலிருந்த பழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மட்டும் மணி என பெயர் சொல்லி அழைப்பார்களாம். இதை பாக்கியராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

To Top