Connect with us

என்னை மன்னிச்சுடுங்க பிரதீப்.. பிக்பாஸ் வஞ்ச விஷம்னு இப்பதான் தெரியுது.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த ஐஸ்வர்யா!..

aishu pradeep

Bigg Boss Tamil

என்னை மன்னிச்சுடுங்க பிரதீப்.. பிக்பாஸ் வஞ்ச விஷம்னு இப்பதான் தெரியுது.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த ஐஸ்வர்யா!..

Social Media Bar

bigg boss season 7 Aishu : துவங்கியப்போது மிகவும் பொறுமையாக துவங்கினாலும் மூன்றாவது வாரத்தில் இருந்து அதிக வரவேற்பை பெற்று வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. மாயா கேப்டனாக மாறியதில் இருந்து மக்கள் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவங்கிவிட்டனர் என கூறலாம்.

தற்சமயம் விசித்திரா, அர்ச்சனா மற்றும் தினேஷ் மூவரும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற போட்டியாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டப்போது அது அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானது.

பிரதீப்பை பொறுத்தவரை அவர் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியே அவரை பிக்பாஸில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளிவந்த ஐஸ்வர்யா இதுக்குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது, பிக்பாஸ் பார்க்கும் மக்களிடம் எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பிய பலரையும் நான் ஏமாற்றிவிட்டேன். எனக்கு இந்த நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை அளித்தப்போதும் நான் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் தவறாக போய் விடக்கூடாது  என நினைத்த யுகேந்திரன் சார், விசித்திரா மா, பிரதீப் மற்றும் அர்ச்சனாவிடம் எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

பிக்பாஸ் ஒரு விஷத்தனமான சூழலை கொண்டிருக்கிறது. அதை கையாளும் அளவிற்கு நான் தயாராகி போகவில்லை என்பதே உண்மை, கோபம், அன்பு, நட்பு என உறவுகளுக்குள் சென்றதால் அது எனது கண்ணை கட்டிவிட்டது என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

To Top