Bigg Boss Tamil
பிக்பாஸ் ஆரம்பிச்சது சரி.. அந்த விஷயம் கூட காபியடிக்கணுமா.. விஜய் சேதுபதி குறித்து ரசிகர்கள் பேச்சு..!
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க போகிறது என்கிற விஷயமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. யாரெல்லாம் இதில் போட்டி போட போகிறார்கள் என்கிற கேள்வி ஒரு பக்கம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அதேபோல எப்போதுமே கமல்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இந்த முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பேசுவதை பொறுத்தவரையில் விஜய் சேதுபதி மேடைகளிலேயே மிகவும் சிறப்பாக பேசக்கூடியவர் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவரால் தொகுத்து வழங்க முடியும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகிறது.
விஜய் சேதுபதியிடம் மாற்றம்:
இருந்தாலும் கமல் அளவிற்கு பிக் பாஸை விஜய் சேதுபதியால் கொண்டு செல்ல முடியுமா? என்பதும் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸின் ப்ரோமோவில் விஜய் சேதுபதி வரும்பொழுது அவர் மீசை தாடி எல்லாம் எடுத்து விட்டு வந்திருப்பதை பார்க்க முடிந்தது.
பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் பொழுது கமல்ஹாசனும் இப்படிதான் மீசை தாடி எல்லாம் எடுத்துவிட்டு கிளீன் ஷேவ் செய்து கொண்டு வந்து நிகழ்ச்சியில் இறங்குவார். அதையே விஜய் சேதுபதியும் செய்து இருக்கிறாரே என்று பேசி வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும் விஜய் சேதுபதி பேசும் தோனியும் கூட கிட்டத்தட்ட கமல்ஹாசனை போலவே இருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். எனவே கமலை காப்பி அடித்து அது போலவே செய்யாமல் கொஞ்சம் உங்களது சொந்த பாணியில் முயற்சி செய்யுங்கள் என்று விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
